ஹோம் /தென்காசி /

தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - எங்கு நடக்கிறது தெரியுமா?

தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - எங்கு நடக்கிறது தெரியுமா?

வேலை வாய்ப்பு முகாம் - மாதிரி படம்

வேலை வாய்ப்பு முகாம் - மாதிரி படம்

Job Fair in Tenkasi | சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் தென்காசி இணைந்து 20.01.023 அன்று பஞ்சாயத்து யூனியன் அலுவலகம்,தென்காசியில் வைத்து நடைபெறவுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். வாயிலாக ஒவ்வொரு மாதமும் 2வது அல்லது 3வது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

பிரபல தனியார்துறை நிறுவனமான ராமசந்திரன் ரீடைல் பிரைவெட் லிமிடெட் நிறுவத்திற்கென சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் தென்காசி இணைந்து 20.01.023 அன்று பஞ்சாயத்து யூனியன் அலுவலகம்,தென்காசியில் வைத்து நடைபெறவுள்ளது.

இந்நிறுவனத்தில் அதிக அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைத்து கல்வித்தகுதிகளும் பல்வேறு நிலைகளில் பணிபுரிய தேவைப்படுகின்றனர். இடம், உணவு, வாகன வசதி இலவசம், வழங்கப்படும். ESI, PF மற்றும் திறமைக்கேற்ப நல்ல சம்பளம்.

மேற்காணும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது அனைத்து கல்விச்சான்று, ஆதார் கார்டு, பாஸ்போட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றுடன் தனியார்துறை வேலைவாய்ப்பு நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து பயன்பெறுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

First published:

Tags: Job Fair, Local News, Tenkasi