ஹோம் /தென்காசி /

பிரைவேட் நீர்வீழ்ச்சி, ஆஃப் ரோடு டிரைவ், படகு சவாரி.. - இயற்கை எழில் சூழ் குண்டாறு அணைக்கு ஒரு விசிட் அடிங்க

பிரைவேட் நீர்வீழ்ச்சி, ஆஃப் ரோடு டிரைவ், படகு சவாரி.. - இயற்கை எழில் சூழ் குண்டாறு அணைக்கு ஒரு விசிட் அடிங்க

gundar dam

gundar dam

Thenkasi News: கண்ணுபுள்ளிமேட்டு பகுதியில் அதிக அளவிலான தனியார் அருவிகள் உள்ளது இங்கு போனாலும் இயற்கை எழில் சூழும் ஒரு ஆப்-ரோடு அனுபவம் கிடைக்கும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்திருக்கும் குண்டாறு அணை தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டைக்கு அருகில் அமைத்திருக்கிறது. இது ஒரு இயற்கை நீர் தேக்கமாகும். இதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தேவையான பாசன வசதிக்காக இந்த குண்டாறு அணை பயன்படுகிறது. மேலும் இது தென்காசி மாவட்டத்தில் மிக முக்கியமான சுற்றுலா தலமாகவும் இருக்கிறது.

  தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் குண்டாறு அணை 1979இல் கட்ட தொடங்கி 1983 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. குண்டாறு அணையின் நீர்த்தேக்க அளவு, 389 மீட்டர் நீளம், 36.10 மீட்டர் உயரமாகவும் இருக்கிறது. ஆனால் இந்த அணையின் மொத்த கொள்ளளவு 25மீட்டர் தான். பருவ காலங்களில் தொடர் மழை  பெய்தால் முழு கொள்ளளவையும் எட்டிவிடும் இந்த அணை. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரு பருவகாலத்திலும் இது முழு கொள்ளளவையும் எட்டி அணை நிரம்பி வழியும்.

  குண்டாறு அணை தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் சாலையில் அமைந்திருப்பதால் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. மேலும் இதன் அருகில் அதிக அளவிலான தனியார் அருவிகளும் இருக்கின்றது. அதற்கு செல்ல விரும்பினால் தனியார் ஜீப்களில் தான் செல்ல முடியும். அதற்கான கட்டணமும் வசூலிக்கப்படும்.

  பிரைவேட் ஃபால்ஸ் :

  குற்றாலத்தில் கூட்டமாக குளிக்க விரும்பாமல் தனிமையை விரும்பும் பலரின் தேர்வாக இந்த பிரைவேட் ஃபால்ஸ் நிச்சயம் இருக்கும். இங்கு அணை, அருவி, நீரோடை என குளிப்பதற்கு மூன்று இடங்கள் இருக்கும் ஆனால் மழைக்காலங்களில் அணையில் குளிப்பதற்கு தடை இருக்கும்.

  Also Read: தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரபல அருவிகளின் லிஸ்ட் - சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத  இடங்கள்!

  கண்ணுபுள்ளிமேட்டு பகுதியில் தான் அதிக அளவிலான தனியார் அருவிகள் இருக்கிறது. மேலும் இயற்கை எழில் சூழும் ஒரு ஆப்-ரோடு அனுபவமும் கிடைக்கும். மேலும் குண்டாறு அணை அருகில் 10 பேர் செல்லக்கூடிய போட்டிங் வசதியும் உண்டு அதற்கு 150 ரூபாய் விதம் கட்டணமாக வசூலிப்பார்கள். ஆனால் மழை அதிகம் இருக்கும் பருவ காலங்களில் அது நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும். அதனருகில் பூங்காவும் இருக்கிறது.

  பூங்கா மற்றும் படகு சவாரியை ஏலம் விடுவதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. 25மீ கொள்ளளவு இருக்கும் குண்டாறு அணையில் தற்போது 18மீட்டர் கனஅடிக்கும் குறைவான அளவிலேயே நீர் தேக்கம் செய்ய முடிகிறது. சரியான முறையில் தூர் வராமல் மழை காலங்களில் அடித்து வரப்படும் மணல்கள், கற்கள் மற்றும் சகதிகளே இதற்கு காரணமாக தெரிகிறது. இதனை தூர் வாருவதற்கு மாவட்ட நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பமாக உள்ளது.

  செய்தியாளர்: சுபா கோமதி ( தென்காசி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Dams, Environment, Tenkasi, Tourism