ஹோம் /தென்காசி /

தென்காசி மாவட்டத்தில் நாளை (3.12.2022) பல்வேறு இடங்களில் மின் தடை அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் நாளை (3.12.2022) பல்வேறு இடங்களில் மின் தடை அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

Tenkasi District News : தென்காசி  மாவட்டத்தில் நாளை ( சனிக்கிழமை)  பல்வேறு பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) (3.12.2022) பல்வேறு பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர் வடகரை, ஒ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், மணிமுத்தாறு, கடையம், ஆலங்குளம், ஊத்துமலை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(சனிக்கிழமை) பாரமரிப்பு பணிகள் நடப்பதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : “வீட்டு வேலைகளை பெண்களும், ஆண்களும் சமமாக பகிர்ந்து கொள்வோம்” - தென்காசியில் உறுதிமொழி ஏற்பு

மின்தடை ஏற்படும் பகுதிகள் :

தென்காசி : தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகர், ராமசந்திரபட்டினம், மேல மெஞ்ஞானபுரம்.

செங்கோட்டை : செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு.

சுரண்டை : சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைகுளம், சுந்தரபாண்டியபுரம் பாட்டக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம்.

சாம்பவர் வடகரை: சாம்பவர்வடகரை, சின்னத்தம்பிநாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம், ஆலங்குளம்,

ஒ.துலுக்கப்பட்டி : ஆழ்வான்துலுக்கப்பட்டி, ஒ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழ குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை.

வீரவநல்லூர் : கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரங்கசமுத்திரம். அம்பை:- அம்பை, ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி.

மணிமுத்தாறு : மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம்,

இதையும் படிங்க : தென்காசியில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை.. கலெக்டர் எச்சரிக்கை..

கடையம் : கடையம், பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடானூர், மாதாபுரம், மயிலப்புரம், வெய்காலிபட்டி, மேட்டூர்.

ஆலங்குளம் : ஆலங்குளம், ஆலடிப்பட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிப்பட்டி, ஐந்தான்கட்டளை, துத்திகுளம், கல்லூத்து, குருவன்கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தப்பாஞ்சான், மாயமான்குறிச்சி.

ஊத்துமலை : ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பபுரம், சோலைச்சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திகுளம், கங்கணாங்கிணறு, ருக்மணியம்மாள்புரம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கீழப்பாவூர் : கழுநீர்குளம், அடைக்கலாப்பட்டணம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி.

First published:

Tags: Local News, Tenkasi