முகப்பு /தென்காசி /

தென்காசி மாவட்ட மக்களே உஷார்... நாளை இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது

தென்காசி மாவட்ட மக்களே உஷார்... நாளை இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது

மின் தடை

மின் தடை

Tenkasi District | தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (21.02.2023) பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால், இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும், மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று டையநல்லூர் கோட்ட மின் விநியோகம் செயற்பொறியாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Must Read : மதுரையில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அருமையான இடம்... இயற்கை, அரிய பறவைகள் வரலாற்று சின்னங்களுடன் பயணிக்கலாம்!

மின் தடை பகுதிகள்:

கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி உபமின் நிலையத்திற்கு உட்பட்ட சிவகிரி, தேவி பட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடப்பட்டி மற்றும் வடுகபட்டி ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tenkasi