முகப்பு /தென்காசி /

பிரண்டை துவையலை இப்படி செய்தால் அமிர்தம் போல் இருக்கும்? தென்காசி சூப் வியாபாரி சொன்ன சூப்பர் டிப்ஸ்..

பிரண்டை துவையலை இப்படி செய்தால் அமிர்தம் போல் இருக்கும்? தென்காசி சூப் வியாபாரி சொன்ன சூப்பர் டிப்ஸ்..

X
பிரண்டை

பிரண்டை துவையல்

Healthy Recipes : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த இயற்கை மூலிகை சூப் கடை நடத்தி வரும் வேல்சாமி சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கும் பிரண்டை துவையல் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

பிரண்டை சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும் ஞாபக சக்தி அதிகரிக்கும் மேலும் மூளையின் நரம்புகள் பலப்படும் என பல நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் பிரண்டையை எப்படி உணவோடு சேர்த்துக் கொள்வது என்பதில் நம்மில் பலருக்கும் தயக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டு பாருங்கள். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த இயற்கை மூலிகை சூப் கடை நடத்தி வரும் வேல்சாமி சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கும் பிரண்டை துவையல் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் பெரிதும் விரும்பி வாங்கி வருகின்றனர். அவர்கள் எப்படி பிரண்டை துவையல் தயார் செய்கின்றார்கள் என்பதனை பார்த்து தெரிந்து கொள்வோம்.

பிரண்டையை வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்திலேயே அவர்கள் வளர்க்கின்றனர். மேலும் பிரண்டையில் இருக்கும் நார்களை அகற்றி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்கின்றனர். மேலும் பிரண்டை நன்றாக நிறம் மாறும் வரை வதக்கி கொள்கின்றனர். அதன் பிறகு பூண்டு, வெங்காயம் கருவேப்பிலை என ஒன்றின் பின் ஒன்றாக தனித்தனியே வதக்கி எடுத்துக் கொள்கின்றனர். இதில் சிறிதளவு புளியும், கல் உப்பு, மற்றும் கட்டி காயத்தை இடித்து பொடியாக்கி இதனுடன் சேர்த்துக் கொள்கின்றனர்.

இவை அனைத்தையும் நன்றாக அரைத்து துவையல்போல் ஆக்கிய பின்பு அதில் கடுகு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் தாளித்து தயார் செய்கின்றனர். மேலும் இதனை உணவுடன் சாப்பிடுவதற்கு அமிர்தம்போல் இருக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும் இதனை 30 ரூபாய்க்கு விற்பனை செய்தும் வருகிறார் வேல்சாமி.

First published:

Tags: Local News, Tenkasi