அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கு ஏற்றார் போல் நாம் உடலில் உள்ள ஆரோக்கியமே நம் முகத்தில் வெளிப்படும். பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினை காரணமாக முகத்தில் அதிக அளவு பொருட்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் அதிக முகப்பரு வரும்.
கேரட் சாறு ஆரின் சாறு மற்றும் இளநீர் அதிக அளவில் உட்கொள்ளும் பொழுது முகத்தில் நல்லதொரு பொலிவு கிடைக்கும் மேலும் முகப்பருக்களும் குறையும். மேலும் கசகசா ஃபேஸ் பேக் மற்றும் ஆவி பிடித்தல் மூலம் முகப்பரு வருவதை தடுக்க முடியும். மேலும் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் அளவிலாவது தண்ணீர் பருக வேண்டும்.
மேலும் வாரத்திற்கு இரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அதிக அதிக அளவிலான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்வதின் மூலம் நாம் உடலையும் முகத்தையும் அழகாக வைத்துக் கொள்ள முடியும். காய்ச்சாத பாலில் இரண்டு மணி நேரம் கசகசாவை ஊற வைத்த பின்னர் அதனை அரைத்து பொடி செய்து முகத்தில் தடவி ஃபேஸ் பேக் அல்லது ஸ்க்ரப்பர் போன்று பயன்படுத்தலாம்.
இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்யலாம். வாரத்தில் மூன்று முறை வெந்நீரை கொதிக்க வைத்து அதனை ஆவி பிடித்து வந்தால் முகத்தில் இருக்கும் வெள்ளை படலத்தை குறைக்க முடியும். கேரட் மற்றும் ஆரஞ்சில் இருக்கும் சத்துக்களால் கல்லீரலை சுத்தம் செய்து பருக்கள் வருவதை தடுக்க முடியும். இன்று தென்காசி மாவட்ட சித்த மருத்துவர் செல்வராணி குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Natural remedies, Pimple, Tenkasi