ஹோம் /தென்காசி /

மூல நோய்க்கு அற்புத மருந்து நாயுருவி இலை - அனுபவ பாடத்தை சொல்லும் தென்காசி விவசாயி

மூல நோய்க்கு அற்புத மருந்து நாயுருவி இலை - அனுபவ பாடத்தை சொல்லும் தென்காசி விவசாயி

X
நாயுருவி

நாயுருவி இலை

Tenkasi District News : நாயுருவி மற்றும் துத்தி இலையை உண்டால் மூல நோயை விரட்டி அடிக்கலாம் என்று விளக்கமாக சொல்கிறார் தென்காசி விவசாயி.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

மூலிகைகளின் அரசன் என போற்றப்படும் அளவுக்கு நாயுருவி செடியில் அத்தனை மருத்துவ குணங்கள் இருக்கிறது.

நாயுருவி செடி அணைத்து இடங்களிலும் எளிதாக வளரக்கூடிய ஒன்றாகும். ஏன் பாறைகளின் இடுக்கில் கூட எளிதாக வருவதால் இதற்கு கல்லுருவி என்ற பெயர் பெற்றது.

செந்நாயுருவி சாதாரண சளி, பல் பிரச்சனை முதல் மூல நோய் வரை சரி செய்யும் அற்புத ஆற்றல் இதற்கு உண்டு.

இதன் பயன்கள் குறித்து தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாரியப்பன் தெளிவாக எடுத்துரைத்தார்.

இதையும் படிங்க : தென்காசி மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

குறிப்பாக மூல நோயை இந்த நாயுருவி எளிதில் குணப்படுத்தும் என தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”நாயுருவி மற்றும் துத்தி இலை கொண்டு மூல நோயை இயற்கை முறையில் குணப்படுத்த முடியும். நாயுருவியில் இரண்டு வகைகள் உண்டு இதில் பச்சை மற்றும் சிவப்பு நிறமாகும்.

இது தீராத மூலம் மற்றும் ரத்த போக்கு நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும். நாயுருவி இலையை எடுத்து கழுவி அதற்கு சமமான அளவு சின்ன வெங்காயம் ஆகியவற்றை விளக்கு எண்ணெயில் வதக்கி சாப்பிடலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதோடு துத்தி இலையும் சேர்த்து வதக்கி சாப்பிடும் போது மூல நோய் விரைவில் குணமாகும்” என்றார்.

செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி

First published:

Tags: Home remedies, Local News, Tenkasi