முகப்பு /தென்காசி /

தென்காசி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : 280 மனுக்கள் மீது நடவடிக்கைக்கு ஆட்சியர் உத்தரவு

தென்காசி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : 280 மனுக்கள் மீது நடவடிக்கைக்கு ஆட்சியர் உத்தரவு

மக்கள குறை தீர்க்கும் கூட்டம்- மாதிரி படம்

மக்கள குறை தீர்க்கும் கூட்டம்- மாதிரி படம்

Tenkasi| இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உட்பட 280 மனுக்கள் பெறப்பட்டன.

  • Last Updated :
  • Tenkasi, India

இந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உட்பட 280 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சி தலைவர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொறுப்பு) நடராஜன், கலால் உதவி ஆணையர் ராஜ மனோகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உட்பட 280 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கூட்டத்தில் கடையநல்லூர் அருகே உள்ள கள்ளம் புளி ஊர் நாட்டாண்மை ஏமராஜா தலைமையில் பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், "கள்ளம்புளிகுளத்தின் நீரை கொண்டு கோவிலாண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாயம் செய்கின்றனர். தற்போதைய சூழலில் கள்ளம்புளி குளத்தில் இருந்து குலையநேரி குளத்திற்கு குழாய் மூலம் நீர் கொண்டு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அது எங்களை பாதிக்கும் செயல் ஆகும். எனவே அதனை ஆய்வு செய்து அந்த பணியை ரத்து செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

மேலும் கியாஸ் சிலிண்டர் தொழிலாளர்கள் கொடுத்துள்ள மனுவில், “எங்களுக்கு பொதுமக்களிடம் இருந்து டிப்ஸ் கேட்டுதான் சம்பளம் என்ற நிலை உள்ளது. எனவே எங்களுக்கு தேவையான சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Tenkasi