முகப்பு /தென்காசி /

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சாமி கோவிலில் பங்குனி பிரமோற்சவ முதல் நாள் திருவிழா தொடங்கியது...

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சாமி கோவிலில் பங்குனி பிரமோற்சவ முதல் நாள் திருவிழா தொடங்கியது...

 பால்வண்ணநாத சாமி

பால்வண்ணநாத சாமி

Thenkasi News | பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்

  • Last Updated :
  • Tenkasi, India

கரிவலம்வந்தநல்லூரில் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலின் துணைக்கோயில் ஆகும். மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள் காலை, இரவு ஆகிய இரண்டு வேளைகளும் வீதி உலா வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரனைகள் நடைபெற்றது. இதில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகவேல் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம்  11ஆம் திருநாளான ஏப்ரல் 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

top videos
    First published:

    Tags: Local News, Tenkasi