முகப்பு /தென்காசி /

வயிற்று புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்து பனை தவுன்.. குற்றாலம் போனீங்கனா கண்டிப்பா சாப்பிடுங்க..!

வயிற்று புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்து பனை தவுன்.. குற்றாலம் போனீங்கனா கண்டிப்பா சாப்பிடுங்க..!

X
பனை

பனை தவுன்

Panai Thavun : குற்றால சாலையோர கடைகளில் இந்த பனை தவுன் அதிகளவில் பார்க்க முடியும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு செல்லும் வழியில் இருக்கும் சாலையோர கடைகளில் இந்த பனை தவுனை நீங்க பார்க்கலாம்.

இந்த பனை தவுன் எல்லா மாதங்களும் கிடைக்காது. நமக்கு வெகு சில மாதங்கள் மட்டுமே இது நமக்கு சாப்பிடுவதற்கு கிடைக்கும். பனை தவுன் என்பது பனம் பழத்தின் கொட்டையிலிருந்து கிடைக்கும் ஒரு ஆரோக்கியமான உணவு தான்.

இது வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். பனங்கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட தவுன் ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஜூலை மாதங்களில் மட்டுமே அதிக அளவில் கிடைக்கும். குற்றால சாலையோர கடைகளில் இந்த பனை தவுன் அதிக அளவில் பார்க்க முடியும். பனை தவுனில் அதிக நீர்ச்சத்து உள்ளது. மேலும் இது சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். ரூ.50க்கு ஒரு ஓலை நிறைய பனை தவுன் கிடைக்கும்.

First published:

Tags: Local News, Tenkasi