தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் கனரா பேங்க் முன்பு அமைந்திருக்கும் சூப் கடை தான் இயற்கை மூலிகை சூப் கடை. இந்த சூப் கடையில் முடக்கத்தான் சூப் தான் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இங்கு வெஜிடபிள் சூப், முருங்கைக்கீரை சூப், காளான் சூப், வாழைத்தண்டு சூப், ஆவாரம் பூ சூப், பிரண்டை சூப் போன்ற சூப் வகைகளும் உளுந்தம் களி, வெந்தய களி போன்ற ஆரோக்கியமான களி வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இங்கு பிரண்டை துவையலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சூப் வகைகள் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த கடையின் உரிமையாளர் வேல்சாமி ராஜபாளையத்தில் இயற்கை மூலிகை சூப் செய்து விற்பனை செய்து வரும் மோகன் என்பவரிடம் தொடர்ந்து சூப் குடித்தவர்.இதனால் அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டு தனது உடல் ஆரோக்கியமாக இருப்பதாகஅறிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து கற்றுக்கொண்டு சங்கரன்கோவிலில் கடந்த இரண்டு வருடமாக இயற்கை மூலிகை சூப் வியாபாரம் செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் அவரின் வீட்டிற்கு பின்னாடி சிறிய தோட்டம் அமைத்து அதன் தேவையானவைகளைவளர்த்தும் வருகின்றார். இதில் பிரண்டை,தூதுவளை, முருங்கை போன்றவை வளர்கின்றது.
மேலும் எந்தவித இரசாயனமும் கலக்காமல் மூலிகைகளால் சூப் செய்வதால் இவரிடம் அதிக வாடிக்கையாளர்கள் வருவதாக கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi