முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவிலில் வாடிக்கையாளர்களை கவரும் மூலிகை சூப் கடை! டேஸ்ட்டுக்கான சீக்ரெட் இதுதான்..

சங்கரன்கோவிலில் வாடிக்கையாளர்களை கவரும் மூலிகை சூப் கடை! டேஸ்ட்டுக்கான சீக்ரெட் இதுதான்..

X
மாதிரி

மாதிரி படம்

Tenkasi News | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கனரா அருகே பேங்க் சூப் கடை வைத்திருக்கிறார் வேல்சாமி. மூலிகை கொண்டு இவர் செய்யும் பல வகையான சூப் மற்றும் பாரம்பரிய உணவு ரகங்களுக்கு இந்த பகுதி மக்கள் அடிமை என்றே கூறலாம். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கனரா பேங்க் அருகே சூப் கடை வைத்திருக்கிறார் வேல்சாமி. மூலிகை கொண்டு இவர் செய்யும் பல வகையான சூப் மற்றும் பாரம்பரிய உணவு ரகங்களுக்கு இந்த பகுதி மக்கள் அடிமை என்றே கூறலாம்.

இதுகுறித்து சூப் கடை நடத்தும் வேல்சாமி கூறுகையில், “10 வருடத்திற்கு மேலாக டவரில் வேலை செய்து வந்தேன். ஒரு கடையில் சூப் வாங்கி குடித்தேன். திடீரென எனது உடல் ஆரோக்கியமாக மாறியது. இதுகுறித்து அந்த கடைக்காரிடம் கேட்டு சூப் வைக்க கற்றுக்கொண்டேன். உணவே மருந்தாக உண்டு நம் முன்னோர்கள் சாகும் வரை நோயின்றி வாழ்ந்தனர். எனில் அந்த வாழ்க்கை முறையும் அந்த உணவுகளும் தானே சிறந்தது. எனவே இதை பின்பற்ற வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் பிறருக்கும் இதை பின்பற்ற சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டது தான் இந்த கடை.

இங்கு நான் பல வகையான சூப் வகைகளை தயார் செய்கிறேன். முடக்கத்தான் கீரை சூப், காளான் சூப், வெஜிடபிள் சூப், வாழைத்தண்டு சூப், ஆவாரம் சூப் என பல ஆரோக்கியமான சூப் வகைகள் விற்று வருகிறேன். இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் மல்லி, புதினா, கருவேப்பிலை ஆகிய அனைத்தையும் தனித்தனியாக அரைத்து அனைத்து சூப்களிலும் பயன்படுத்துவதே எனது ரகசியம். மேலும் கருவேப்பிலை, புதினா, மல்லி போன்றவைகளை முழுதாக போட்டால் வாடிக்கையாளர் குடிப்பதற்கு விரும்பமாட்டார்கள் என்பதால் இதனை அரைத்து பயன்படுத்துகிறேன்.

இது அதன் சூப்பின் சுவையை அதிகப்படுத்தும். முடக்கத்தான் கீரை சூப்பிற்கு, தூதுவளை மற்றும் முடக்கத்தான் இரண்டையும் அரைத்து செய்யப்படும். வாழைத்தண்டு சூப்பிற்கு வாழைத்தண்டு மற்றும் வாழை பூவையும் அரைத்து போடுவதால் இதனை குடிப்பவர்கள் அதிக சத்துக்களை பெற முடியும். ஃபிரெஷாக அரைத்த சூப்புடன் அதற்கு தேவையான தண்ணீரை சேர்த்து கல் உப்பு போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். சூப்கள் கொதித்தவுடன் அதில் எலுமிச்சம்பழம் சாற்றை பிழிந்து வடிகட்டி பெரிய, பெரிய கேன்களில் ஊற்றி விற்பனைக்கு எடுத்து செல்வேன்” என்றார்.

First published:

Tags: Local News, Tenkasi