முகப்பு /தென்காசி /

HCL Tech தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..!

HCL Tech தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..!

மாதிரி படம்

மாதிரி படம்

HCl Job Fair | HCL Tech தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையும், தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டமும், HCL நிறுவனமும் இணைந்து 12ம் வகுப்பு தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கும் ஓர் அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

HCL நிறுவனம் TechBee திட்டத்தின் வாயிலாக 2023ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளி மாணவர்களுக்கும் (Matric/CBSE/ICSE), அரசு /அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புடன் உயர்கல்வி பெறும் வாய்ப்பை அளிக்கிறது.

அதற்கான தேர்வு Onlineல் மே 27மற்றும் 28 ஆகிய தேதிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை S. வீராச்சாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் (SVC Engineering College of Technology) நடைபெறுகிறது.

இதையும் படிங்க : என்னது இந்த நதி கண்ணுக்கு தெரியாதா? - அதுவும் நம்ம ஈரோட்டில் உள்ளதா..!

தேர்வு எழுத வரும் மாணவர்கள் 10th, 12th Mark sheet, Aadhaar card, Passport Photo-1, Android Mobile phone & மதிய உணவு எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீங்கள் தேர்வு செய்யப்பட்டால், HCL -TechBee வழங்கும் பயிற்சி மற்றும் வேலையுடன் உயர் கல்வியை BITS Pilani/SASTRA/AMITY/KL University/IM Nagpur பல்கலைக்கழகத்தில் HCL வழங்கும் உதவித் தொகையோடு படிக்கலாம்.

Intenship பயிற்சியின்போது 7வது மாதம் முதல்  12வது மாதம் வரை உதவித் தொகை மாதம் 10,000 வழங்கப்படும். இத்தேர்வில் 2023ல் 75 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற அனைத்துப் பிரிவு அரசு/அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இத்தேர்விற்கு வரும் மாணவர்கள் கீழ்க்கண்ட Linkல் பதிவு செய்துவிட்டு தேர்விற்கு வரவும், பதிவு செய்யாத மாணவர்களும் நேரடியாக தேர்விற்கு வரலாம். பதிவு செய்யவும். https://forms.office.com/r/q3vmdm7qdi மேலும் தொடர்புக்கு மு.செந்தில்குமார் - 9788156509, 6382998925 தொடர்ப்பு கொள்ளலாம்.

First published:

Tags: HCL, IT JOBS, Local News, Tenkasi