ஹோம் /தென்காசி /

பழைய குற்றாலம் அருவி குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்தமான அருவியாக இருப்பதன் ரகசியம்..

பழைய குற்றாலம் அருவி குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்தமான அருவியாக இருப்பதன் ரகசியம்..

குற்றாலம் பழைய அருவி

குற்றாலம் பழைய அருவி

Tenkasi News : சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த குற்றாலம் பழைய அருவி குறுத்து ஒரு செய்தித்தொகுப்பு.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தளம் தான் குற்றாலம் பழைய அருவி. குழந்தைகள் குளித்து மகிழ அருவிக்கு அருகில் நீச்சல் குளம் இருப்பதால் சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக மாறிப்போனது குற்றாலம் பழைய அருவி.

  மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் அழகாய் துள்ளி குதித்து வரும் குற்றால அருவிகளில் ஒன்று தான் இந்த குற்றாலம் பழைய அருவி. மெயின் அருவி, ஐந்து அருவி, செண்பகா தேவி அருவி என பல அருவிகள் இருந்தாலும் குழந்தைகளுக்குமிகவும் பிடித்த அருவி என்றால் அது இந்த குற்றாலம் பழைய அருவி தான்.

  பார்ப்பதற்கே மிகவும் அழகான இடத்தில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது தான் இந்த குற்றாலம் பழைய அருவி. மற்ற அருவிகளை காட்டிலும் பழைய அருவியில் பிரவேசிக்கும் போதேமனம் அமைதியில் திளைத்துப்போய்விடும்.

  இதையும் படிங்க : சிவனும் விஷ்ணுவும் ஒரே உருவமாகி பக்தர்களுக்கு காட்சி தரும் தென்காசி சங்கரநாராயணர் கோவிலின் சிறப்புகள்

  அடர் காடுகளின் வழியாக, அருவியில் விழும் தண்ணீர் பயணிப்பதால்அந்த காட்டில் உள்ள மூலிகைகள் கலந்து வரும் எனவே இதில் குளித்தால் உடல் ஆரோக்கியமானதாகும் என்று கருதப்படுகிறது.

  முன்பு இந்த அருவியில் உயரமான செங்குத்தான பாறையில் இருந்து தண்ணீர் விழுந்ததால் அதில் குளிக்க மக்கள் அச்சப்பட்டனர். உடம்பின் மேல் கல் விழுந்தது போன்ற ஒரு தாக்கத்தை மேல் இருந்து கொட்டும் தண்ணீர் ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் பாறைகள் படிப்படியாக குடையப்பட்டு நீரின் வேகத்தை கட்டுப்படுத்தி ஒரே சீரானநிலையில் தண்ணீர் விழுமாறு மாற்றப்பட்டது.

  குற்றாலம் பழைய அருவி

  அப்போது தான் சிறுவர்கள் குளித்து மகிழ அங்கு உள்ள கற்களை குடைந்து நீச்சல் குளம் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்பு தான் இந்த அருவியில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கினர்.

  இதையும் படிங்க : தென்திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் அண்ணாமலைபுதூரின் வரலாறு தெரியுமா?

  பொதுவாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பெய்யும் போது தான் இந்த அருவிகளில் தண்ணீர் கொட்டும். அதாவது தென்மேற்கு பருவமழை காலங்களான ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்த அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டும்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  அப்போது தான் அதிக எண்ணிக்கையில் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றூலா பயணிகள் வந்து குற்றால அருவிகளில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்வர்.

  செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Tenkasi