ஹோம் /தென்காசி /

தென்காசி மாவட்டத்தில் நாளை (நவம்பர் 22) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் நாளை (நவம்பர் 22) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

Tenkasi District News : தென்காசி மாவட்டத்தில் செவ்வாய் கிழமை (நவம்பர் 22) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில், அச்சன்புதூர், கீழப்பாவூர் ஆகிய துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் நாளை செவ்வாய் கிழமை (நவம்பர் 22) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

அச்சன்புதூர் துணை மின்நிலையம் :

வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவாநகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு பகுதிகள்.

கீழப்பாவூர் துணை மின் நிலையம் :

பாவூா்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாப்பேரி, நாட்டார்டி, ஆவுடையானூர், வெய்க்காலிபட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டிட், செட்டியூர், பெத்தநாடார், கரிசலூர், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் வடக்கு.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tenkasi