முகப்பு /தென்காசி /

வேலை இல்லையா? இந்தாங்க ஊக்கத்தொகை.. தென்காசி மாவட்ட ஆட்சியரின் ஆச்சரியப்படுத்தும் அறிவிப்பு

வேலை இல்லையா? இந்தாங்க ஊக்கத்தொகை.. தென்காசி மாவட்ட ஆட்சியரின் ஆச்சரியப்படுத்தும் அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

Fund For Unemployment | தென்காசியில் வேலைவாய்ப்பு கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஆச்சர்யப்படுத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 10ம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம் மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.6000ம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும், தொடர்ந்து பதிவினை புதுப்பித்தும் இருக்க வேண்டும். SC/SCA/ST பிரிவினர் 45 வயதுக்கு மிகாமலும், BC/BCM/MBCOC பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-  மிகாமல் இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாதவராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்பு, வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600ம் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ, மாணவியர், பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற்பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது எனிலும், தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை(பழையது) மற்றும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட Online Printout, போன்றவற்றுடன் அலுவலக வேலை நாட்களில் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பகத்திற்கு நேரில் வருகை புரிந்து அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அல்லது https://tnyelaivaaippu.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் பொது மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய விண்ணப்பத்தினை தனித்தனியே பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, பொதுப்பிரிவினர் மட்டும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வருவாய்த்துறை சான்றில் கிராம நிர்வாக அலுவலர் மற்றம் வருவாய் ஆய்வாளர் அவர்களின் முத்திரையுடன் கூடிய கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை(பழையது/aniine printout), அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ்(TC), தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம், ஆதார் அட்டை, ரேசன் அட்டை ஆகியவற்றின், அசல் மற்றும் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பயன்பெற வேண்டும்” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Tenkasi