முகப்பு /தென்காசி /

கர்ணன் படத்தில் வருவதுபோல் தென்காசியில் ஒரு கிராமம்.. மினி பஸ் சேவை கூட இல்லை என புலம்பும் பெரியசாமிபுரம் மக்கள்..

கர்ணன் படத்தில் வருவதுபோல் தென்காசியில் ஒரு கிராமம்.. மினி பஸ் சேவை கூட இல்லை என புலம்பும் பெரியசாமிபுரம் மக்கள்..

X
கர்ணன்

கர்ணன் படத்தில் வருவதுபோல் தென்காசியில் ஒரு கிராமம்

Tenkasi News | சங்கரன்கோயிலில் உள்ள பெரியசாமிபுரம் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளான பேருந்து சேவை மற்றும் தார் சாலை ஆகியவை இல்லாததால் இந்த ஊர் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

  • Last Updated :
  • tenkasi, India

நவநாகரீக வளர்ச்சியில் மக்கள் நினைத்த நேரம் தங்கள் காரை எடுத்துக்கொண்டு நினைத்த இடத்துக்கு சென்று வருகின்றனர். இதற்கு மத்தியில் தென்காசி மாவட்டத்தில் ஒரு கிராமம் சரியான சாலை வசதி இல்லாமலும், மினி பஸ் வசதி கூட இயக்கப்படாமலும் இருக்கிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு கீழ் அரியநாகிபுரம் பஞ்சாயத்தின் கீழ் இருந்து வரும் பெரியசாமிபுரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு போடப்பட்ட தார் சாலை தற்போது மண் சாலையாக மாறிவிட்டது. பெரியசாமிபுரத்திற்கு அருகில் இருக்கும் கல்குவாரியில் இருந்து கனரக வாகனங்கள் செல்வதற்கான சாலையாக பெரியசாமிபுரத்தின் சாலை பயன்படுத்தப்படுகிறது.

அதிக எடை தாங்க முடியாத தார் சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக ஆகி தற்போது மண் சாலை போல் காட்சியளிக்கிறது. அது மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் கருப்பாநதி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரும் செல்வம் கால்வாயும் இந்த சாலைக்கு அருகில் இருப்பதால் தண்ணீர் திறந்து விடப்படும் நேரத்தில் சாலையில் செல்லும் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் கால்வாயில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சாலை வசதி இல்லாமல் தவிக்கும் மக்கள்

இதற்குப் போதிய தடுப்பு சுவர்களும் இல்லை. மேலும் மழை நேரங்களில் குழிகளில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது இந்த தார் சாலை. அரியநாயகிபுரம் பூக்கடை சாலையிலிருந்து சாமிபுரத்திற்கு செல்லும் சுமார் மூன்று கிலோமீட்டர் தூர தார் சாலைகள் குண்டும் குழியுமாக மண் சாலை ஆகிவிட்டது. பெரியசாமிபுரம் கிராம மக்களுக்கு இருக்கும் ஒரே சாலை இதுவே. இந்த ஊருக்கு என தனியாக எந்த ஒரு பேருந்தும் கிடையாது. எனவே மக்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் தான் ஊருக்குள் வர முடியும். நல்ல வண்டி ஓட்டுறவங்க கூட இந்த சாலையில் வண்டி ஓட்டுவது கொஞ்சம் கஷ்டம் தான்.

இதையும் படிங்க : ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு!

சாலை சீராக இல்லாததால் ஆட்டோ கிடைப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று ஊர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சாலையில் ஒரு பகுதி சுமார் மூன்று அடி வரை ஆழமாக இருப்பதால் கனரக வாகனங்கள் கூட அதில் இறங்கி செல்வதற்கு சற்று சிரமமாக தான் இருக்கிறது ஆனாலும் இந்த சாலையை தான் குவாரியில் இருந்து பொருட்களை ஏற்றி செல்வதற்கு லாரி ஓட்டுநர்கள் பயன்படுத்துகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    குழந்தைகள் மற்றும் பெண்கள் இந்து சாலையை பயன்படுத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இந்த சாலையில் பயணிப்பது இன்னும் சிரமமாக இருக்கிறது என்று ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். இதைப் பற்றி பலமுறை பெட்டிஷன் அளித்தும் எந்த விதமான நடவடிக்கைகளும் இன்று வரை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    First published:

    Tags: Local News, Tenkasi