ஹோம் /தென்காசி /

சங்கரன்கோவிலில் குடிநீர் பற்றாக்குறையை போக்க விரைவில் புதிய குடிநீர் திட்டம்

சங்கரன்கோவிலில் குடிநீர் பற்றாக்குறையை போக்க விரைவில் புதிய குடிநீர் திட்டம்

சங்கரன்கோவில் கூட்டு குடிநீர் திட்டம்

சங்கரன்கோவில் கூட்டு குடிநீர் திட்டம்

Tenkasi District News | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நீண்ட காலமாக தண்ணீர் தட்டுப்பாடு. விரைவில் புதிய குடிநீர் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பேரூராட்சியில் நீண்ட காலமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏற்கனவே மூன்று கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனினும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கிறது.

  போதிய நீர் ஆதாரங்கள் இல்லாததால் 20 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. சுமார் 60,000 மக்கள் வசிக்கும் ஒரு பேரூராட்சியில் சராசரியாக ஒரு நபருக்கு சுமார் 90 லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது.

  இதுகுறித்து பேசிய சங்கரன்கோவில் பேரூராட்சி மேற்பார்வையாளர் சாகுல் அமீது, “மக்களின் தண்ணீர் தேவை அறிந்த பேரூராட்சி நிர்வாகம் 2019ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துடன் இணைந்து சங்கரன்கோவில் - ஆலங்குளம் கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கியது.

  இதையும் படிங்க : தென்காசிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா? - இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா!

  இதற்காக சுமார் 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய குழாய்கள் அமைக்கும் பணி தற்போது விரைவாக நடந்து வருகிறது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சங்கரன்கோவில், புளியங்குடி, ராஜபாளையம், திருத்தங்கல் மற்றும் சிவகாசி ஆகிய பகுதிகளுக்கு போதிய குடிநீர் வழங்கப்படும். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு சுமார் 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும். ” என்று தெரிவித்தார்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  பலநூறு கோடி செலவில் நடந்து வரும் கூட்டு குடிநீர் திட்ட பணிகளைவிரைவில் முடித்து உடனடியாக தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

  செய்தியாளர் : சுபா - சங்கரன்கோவில் 

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Tenkasi