ஹோம் /தென்காசி /

தாத்தா தாத்தா தலவெட்டி.. இந்த மூலிகையின் பயன் தெரியுமா?

தாத்தா தாத்தா தலவெட்டி.. இந்த மூலிகையின் பயன் தெரியுமா?

X
தாத்தா

தாத்தா செடி 

தாத்தா தலை வெட்டி மூலிகையின் நன்மைகளை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

குழந்தைகள் விளையாட்டாக சொல்லும் தாத்தா தலை வெட்டி செடிக்கு பின்னால் இப்படி ஒரு மருத்துவ குணம் உள்ளது என்று நம்மில் பல பேருக்கு தெரியாது. குழந்தைகள் விளையாட்டாக சொல்லும் தாத்தா செடியின் உண்மையான பெயர் கிராமப்புறங்களில் சேரல் கொடி அல்லது மூக்குத்திப்பூ செடி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. காயங்களுக்கு பயன்படுத்தும் பச்சிலை என்பதால் இது காய பச்சிலை என்றும், கிராமப்புறங்களில் வழங்குவது உண்டு.

இந்தச் செடியை பற்றிய மகத்துவத்தை தெரிந்துகொள்வதற்கு முன்பு, முதலில் இந்த செடியில் இருக்கும் காய்க்கு விஷத்தன்மை உண்டு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கட்டாயம் இந்தச் செடியில் இருக்கும் காயை சாப்பிட கூடாது என்பதை மறந்துவிடாதீர்கள்.இந்த மூக்குத்திப்பூ செடியானது மஞ்சள் நிறப் பூ, வெள்ளை நிறப் பூ, ஊதா நிற பூ என்ற மூன்று விதமான நிறங்களில் பூக்கும் செடிகள் மூன்று வகையில் உள்ளது.

சளிக்கு நல்ல மருந்து.

இந்த மூக்குத்திப் பூ செடி இலைகளை பறித்து நன்றாக கழுவி, மிளகு ரசத்தில் போட்டு ஒரு கொதிவிட்டு, அந்த ரசத்தை குடித்தால் உடம்பில் இருக்கும் சீத்தளத்தை வெளியேற்றி விடும். அதாவது சளி பிரச்சனை, தலை பாரம், தலையில் நீர் கோர்த்தல், இப்படிப் பட்ட பிரச்சினைக்கு நிவாரணமாக இந்த ரசம் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

வெட்டு காயத்திற்கு ஏற்றது

நம்முடைய உடலில் கீழே விழுந்தாலோ அல்லது ஏதாவது வெட்டு காயம் பட்டு ரத்தம் இடைவிடாமல் வந்துகொண்டே இருக்கும் சமயத்தில், இந்த மூக்குத்தி பூவின் செடியின் இலையை பறித்து உள்ளங்கைகளை வைத்து கசக்கினால் சாறு வரும். அந்த சாறை காயத்தின் மீது போட்டால் ரத்தம் உடனடியாக நிற்கும். நீண்ட நாட்களாக உடலில் ஆறாத புண் ஏதும் இருந்தால், அதன் மீது இந்த மூக்குத்திப்பூ இலையை சிறிது தண்ணீர் விட்டு அறைத்து, அந்த விழுதை பூசி வந்தால் கூடிய விரைவில் அந்த புண் ஆறிவிடும்.

இதையும் படிங்க : மேகங்கள் வருடிச் செல்லும் மலை அழகு... எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்...

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் காயம் சீக்கிரமாக ஆறாது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்டவர்கள் உடம்பில் ஏற்படும் காயத்தை கூட சரி செய்யும் அளவிற்கு மருத்துவ குணம் கொண்டதுதான் இந்த மூக்குத்திப்பூ இலை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் உடம்பில் ஏற்படும் தோல் பிரச்சனையான தேமல் சொறி இவைகள் சரியாக இந்த மூக்குத்தி பூ இலையின் சாரை கசக்கி தடவி வந்தாலே போதும். இரண்டே நாட்களில் மறையும்.

முட்டி வலி நீக்கும்:

இந்த மூக்குத்தி பூ செடியில் இருக்கும் பூ, வேர், இலை இவற்றையெல்லாம் ஒன்றாக சேகரித்து, ஒரு கடாயில் போட்டு, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி லேசாக வதக்கி கொள்ள வேண்டும். வதங்கிய அந்த விழுதை எடுத்து, முட்டியில் மீது வைத்து வெள்ளைத் துணி போட்டு கட்டி விட்டால் அந்த பிரச்சனை உடனடியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும். கை மூட்டு வலியா இருந்தாலும் சரி. கால் மூட்டு வலியா இருந்தாலும் சரி.

ரோட்டோரத்தில் இதுநாள்வரை நாம் கவனிக்காமல் இருந்த இந்த ஒரு செடிக்கு இத்தனை மகத்துவமா? கொஞ்சம் ஆச்சரியப்படக் கூடிய விஷயம்தான். நம் கண்களுக்கு தெரியாமல் எத்தனையோ விஷயங்கள், இன்னும் எந்தெந்த பொருட்களில் மறைந்துள்ளதோ! மறைந்த முன்னோர்களுடன் சேர்த்து, இப்படிப்பட்ட பலவகையான அற்புதமான மருத்துவ குறிப்புகளும் மறந்தே போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

First published:

Tags: Medicine, Tamil News, Tamilnadu, Tenkasi