‘ஐ லவ் கோவை’, ’ஐ லவ் நெல்லை’ போன்ற செல்பி ஸ்பாட்கள் தற்போது பல ஊர்களில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையத்திற்கு செல்லும் வழியில் தனியார் பெட்ரோல் பங்க்கில் ”நம்ம சங்கரன் கோவில்” செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் அவுட்டரில் அமைந்திருக்கும் பெட்ரோல் பங்க் என்பதால் இந்த ”செல்பி ஸ்பாட்” பலருக்கும் தெரியாத இடமாக இருக்கிறது.
மற்ற ஊர்களில் இருக்கும் செல்பி ஸ்பாட்களை போல் இன்னும் இது பிரபலமடையவில்லை என்பதால் மக்கள் கண்டு கொள்ளாத வகையில் இருக்கிறது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தர்களாக இருந்தால் இந்த இடத்திற்கு நீங்களும் ஒரு விசிட் செய்து செல்பி ஸ்பாட்டில் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு "நம்ம சங்கரன் கோவிலை" ட்ரெண்ட் செய்யுங்கள்.
Location : Limitedhttps://maps.app.goo.gl/GCFr5SYbRcZXRWZJ8
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi