ஹோம் /தென்காசி /

ரூ.5,000 முதலீடு செய்தால் ரூ.10,000 வருமானம் - சோப் தயாரிப்பில் இத்தனை லாபமா? பிசினஸ் சீக்ரெட்டை உடைத்த கடையநல்லூர் ஆசிரியை

ரூ.5,000 முதலீடு செய்தால் ரூ.10,000 வருமானம் - சோப் தயாரிப்பில் இத்தனை லாபமா? பிசினஸ் சீக்ரெட்டை உடைத்த கடையநல்லூர் ஆசிரியை

X
சோப்

சோப் தயாரிப்பில் அசத்தும் தென்காசி பெண்

Tenkasi Business Women : ரெட் வைன் சோப், ஆட்டுப்பால் சோப், நேச்சுரல் சோப், அவகேடோ சோப், பீட்ரூட் சோப், போன்ற பெண்களைக் கவரும் வகையில் பல வண்ணங்கள் மற்றும் ஃப்ளேவர்களில் சோப் செய்து அசத்தி வருகிறார் தென்காசி ஆசிரியர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் கடையநல்லூர்பகுதியை சேர்ந்த ரூபியா என்ற பெண் வீட்டில் இருந்தபடியே ஹோம் மேட் சோப் செய்து செய்து லாபம் சம்பாதித்து அசத்தி வருகிறார்.

ரூபியா ஆசிரியர் பணியை செய்து கொண்டு கிடைக்கும் நேரத்தை வீண ஆக்காமல் சுய தொழில் செய்யும் நோக்கில் ஹோம் மேட் சோப் தயாரித்து விற்று வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக இந்த தொழிலை செய்து வருகிறார். முதல் 6 மாதத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் இல்லை. ஆனால் அதன் பிறகு நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த சோப் தயாரிப்பு குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “முதலில் சோப் வாங்குவதற்கு பொதுமக்கள் சற்று தயக்கம் காட்டி வந்தனர். அதன் பிறகு முகத்தில் நல்ல மாற்றங்களை கண்டவுடன் அதிக வாடிக்கையாளர்கள் என்னை தேடி வந்தனர்.

இதையும் படிங்க : பெற்றோர் கண்முன் குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட 4 வயது பெண் குழந்தை... மீட்கப்பட்டது எப்படி..?

ஹோம் மேட் சோப் தொழில் செய்வதற்கு ஆரம்பத்தில் 5000 ரூபாய் முதலீட்டாக போட்டால் போதும் பத்தாயிரம் ஆக லாபம் ஈட்டலாம். பெரிய அளவில் தொகை இல்லை என்றாலும் 200 ரூபாயிலிருந்து கூட இந்த தொழிலை நீங்கள் தொடங்க முடியும்.

ரெட் வைன் சோப், ஆட்டுப்பால் சோப், நேச்சுரல் சோப், அவகேடோ சோப், பீட்ரூட் சோப், போன்ற பெண்களைக் கவரும் வகையில் பல வண்ணங்கள் மற்றும் ஃப்ளேவர்களில் நான் சோப்களைசெய்கிறேன்.

என்னிடம் 25 ரூபாயிலிருந்து ஹோம் மேட் சோப் கிடைக்கிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. எந்தவித வேதியியல் பொருட்களும் இல்லாமல் தயாரிப்பதால் இது குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மற்ற சோப்புகளை விட ஹோம் மேட் சோப்புகள் மிகவும் ஆரோக்கியமானது. எனவே மக்கள் ஹோம் மேட் சோப் வகைகளை குழந்தைகளுக்கு பயன்படுத்த தயக்கம் காட்ட தேவையில்லை. இதில் எந்த வித ரசாயன பொருட்களும் சேர்க்கப்படவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பெண்கள் வெளியே வருவதில் தயக்கமாக இருந்தால் கூட வீட்டில் இருந்தபடியே ஹோம் மேட் சோப் போன்றவற்றை செய்வதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும் மற்றும் பெண்களின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்” என்று தெரிவித்து நம்மிடமிருந்து விடைபெற்றார் ரூபியா.

செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி

First published:

Tags: Local News, Tenkasi