தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்திருக்கும் சங்கரநாராயணன் திருக்கோவில் சுக்கிர பாண்டியன் மன்னனால் கட்டப்பட்ட கோவிலாகும். கி.பி. 1022ம் ஆண்டு கட்டப்பட்ட கோவிலாகும். மேலும் அரியும், சிவனும் ஒரே சிலையில் பாதி பாதியாக அமைந்திருப்பது சங்கரநாராயணன் திருக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இது கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்துகிறது.
இந்த கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அவருடன் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். ஆய்வு பணியின்போது சங்கரநாராயண திருக்கோவிலில் குடமுழுக்கு பணி மற்றும் ஆவுடை பொய்கை தெப்ப பணிகளை விரைந்து துவங்கிடவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi