ஹோம் /தென்காசி /

தென்காசியில் இலவச மருத்துவ முகாம்...

தென்காசியில் இலவச மருத்துவ முகாம்...

X
Medical

Medical camp 

Tenkasi News: தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் ரோட்டரி கிளப் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் 9 மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் ரோட்டரி கிளப் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த இலவச மருத்துவ முகாம் சங்கரன்கோவிலில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த இலவச மருத்துவ முகாமில் 250க்கும் மேற்பட்ட பயனாளர்கள் பயன் பெற்றனர். மேலும் இந்த இலவச மருத்துவ முகாமில் நோய் கண்டறிதல் உடல் எடை ஆலோசனை உயர் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, சர்க்கரை நோய், எலும்பு உறுதி தன்மை, நரம்பு சிகிச்சை, காது மூக்கு தொண்டை கதிர்வீச்சு சிகிச்சை, நேரோ ரெட் தெரபி. பிசியோதெரபி, மகளிர் நல மருத்துவம், மார்பக புற்றுநோய் கண்டறிதல், உணவு முறை ஆலோசனை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த இலவச மருத்துவ முகாமில் 9 மருத்துவர்கள் பங்கேற்று மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் மருத்துவர் தீபக் குமார் அசோக் பிரபாகர் சிராஜ் பாத்திமா, வினில், ஆறுமுகம், விபின் குமார்,வினோதன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர்: சுபா கோமதி ( தென்காசி)

First published:

Tags: Local News, Tamil News, Tenkasi