முகப்பு /தென்காசி /

மே தினம் : தொழிலாளர்களுக்கு புதுவிதமாக நன்றி தெரிவித்த தென்காசி பள்ளி மாணவர்கள்!

மே தினம் : தொழிலாளர்களுக்கு புதுவிதமாக நன்றி தெரிவித்த தென்காசி பள்ளி மாணவர்கள்!

X
மே

மே தின விழிப்புணர்வு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தொழிலாளர் தினத்தை ஒட்டி உழைப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் மே 1 என மாணவர்கள் வரிசையாக நின்று எழுத்துருவாக்கம் செய்து வியக்கவைத்தனர்.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 'May 1' (மே 1) என்ற எழுத்து வடிவில் மாணவர்கள் நின்று தொழிலாளர்களுக்கு நன்றி செலுத்தினர்.

உலகம் முழுவதும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக, 8 மணி நேர வேலை என்பது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை போராடி பெற்றனர். இது மே முதல் நாளில் நடந்தேறியது. எனவே, இந்த நாள் உலகம் முழுவதும் தொழிலாளர் தினமானது மே தினம் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் இணைந்து  'May 1' (மே 1) என்ற எழுத்து வடிவில் மாணவர்கள் நின்று தொழிலாளர்களுக்கு நன்றி செலுத்தினர்.

மே 1 விழிப்புணர்வு

top videos

    மேலும், கோமதி அம்மாள் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பள்ளியில் பணியாற்றிய அனைத்து தொழிலாளர்களுக்கும் உணவு மற்றும் இனிப்புகளை வழங்கினார். இவ்வாறு அங்கே தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.

    First published:

    Tags: Local News, Tenkasi