தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் அங்காளம்மன் கோவில் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கோவிலில் வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் கல்மண்டபம் சுமார் 90 ஆண்டுகள் பழமையானதாகும். உள் புறத்தில் அமைந்திருக்கும் கல்மண்டபம் சுமார் 145 வருடங்கள் பழமையானது என்று கோவிலில் இருக்கும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. பச்சை பசேலென வயல்வெளிகள் மத்தியில் அமைதியாகவும், அழகாகவும் அமைந்துள்ளது அங்காளம்மன் கோவில். 1989ல் அங்காளம்மன் கோவிலில் முதல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, மூலவர் அங்காளம்மன் ஆகவும், பேச்சியம்மன், விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத முருகன் ஆகிய தெய்வங்களும் இந்த கோவிலில் இடம் பெற்றுள்ளன. தபசு தம்பிரான், வியர்வை புத்திரன், இருளப்பசாமி, ஒண்டி வீரன், மாவு இசக்கி, பாம்பு சித்தன், கருப்பசாமி, போன்ற காவல் தெய்வங்களும் அமைந்திருக்கிறது. சிவராத்திரி அன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இந்த ஆலயத்தில் வந்து பேச்சி அம்மனுக்கு மஞ்சள் எண்ணெய் படைத்து வழிபடுவது வழக்கம். அப்படி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அவ்வாறு பக்தர்களால் படைக்கப்பட்ட மஞ்ச எண்ணெயைத்தான் பூஜையின்போது அம்மனுக்கு பயன்படுத்துவர். அந்த மஞ்ச எண்ணெயை ஊற்றிய இடமே பேச்சி அம்மனுக்கு பின்னல் மலை போன்று காட்சியளிக்கிறது. சிவராத்தி அன்று அங்காளம்மன் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடவும், சிவராத்திரியின் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு அம்மன் சன்னதி முன் ஒரு பானையின் விளிம்பில் வாலாயுதம், வேலாயுதம் மற்றும் சூலாயுதம் ஆகியவை நிறுத்தி வைக்கப்படுமாம். முக்கால் கிலோ எடை கொண்ட 3 ஆயுதங்களும் அப்படியே நிற்குமாம். இப்படி ஒன்றே முக்கால் நாழிகை நிற்குமாம். இதை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடவார் என்று இந்த கோயிலின் பூசாரி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi