முகப்பு /தென்காசி /

மொறு மொறு மரவள்ளி சிப்ஸ் விற்பனை தென்காசியில் படுஜோர்..

மொறு மொறு மரவள்ளி சிப்ஸ் விற்பனை தென்காசியில் படுஜோர்..

X
மரவள்ளி

மரவள்ளி சிப்ஸ்

Maravalli Chips : மொறு மொறுப்பான மரவள்ளி சிப்ஸ் விற்பனை தென்காசியில் படுஜோராக நடக்கிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

சாலையோர கடைகளில் பரபரப்பான விற்பனையில் இருப்பது இந்த மொறு மொறுப்பான மரவள்ளிகிழங்கு சிப்ஸ் தான். மற்ற கிழங்குகளை விட மரவள்ளி கிழங்கு மருத்துவ குணமும் அதிகம் கொண்டுள்ளது. கப்பக்கிழங்கு, குச்சி கிழங்கு, மரசீனி கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு என்று இதற்கு பல பெயர்கள் உண்டு. கிழங்கு வகைகளை சமைப்பதில் பொதுவாக அனைவருக்கும் சற்று தயக்கம் காட்டுவார்கள். ஆனால் இப்படி மொறுமொறுப்பான சிப்ஸ் செய்து கொடுத்தால் இதை சாப்பிடுவதற்கு அனைவரும் விரும்புவர்.

சாலையோர கடைகளில் மரவள்ளிக் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு மெல்லிசாக சீவி பின்பு அதனை தனித்தனியாக பிரித்து எடுத்து சூடான எண்ணெயில் போட்டு மொறு மொறுப்பாக தயார் செய்வார்கள். அதுவும் வேகமாக கிழங்கை சீவும் அழகே தனிதான்.

வாங்குபவர்களுக்கு ஏற்றார் போல் காரம் போட்டு கொடுப்பார்கள். இந்த சாலை ஓர கடையில் ஒரு நாளைக்கு 18 கிலோ மரவள்ளிக்கிழங்கு மொறு மொறுப்பான சிப்ஸ் ஆக மாறுகிறது.

இதில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு சிப்ஸ் விற்றால் லாபம் என வெறும் 500 ரூபாய் தான் கடைக்காரருக்கு கிடைக்கிறது என கடைகாரர்கள் ஒரு பக்கம் புலம்புகின்றனர். 100 கிராம் சிட்ஸ் முப்பது ரூபாய் கால் கிலோ சிப்ஸ் 70 ரூபாய்க்கும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் சங்கரன்கோவிலில் சாலை ஓரங்களில் இந்த கடையை பார்த்தால் தவறாமல் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள். சாயங்காலம் ஒரு டீயுடன் இந்த மொறுமொறுப்பான சிப்ஸை சுவைத்து பாருங்கள். இந்த கடை சங்கரன்கோவில் நீதிமன்றத்திற்கு எதிர்ப்புறம் அமைந்திருக்கிறது.

First published:

Tags: Local News, Tenkasi