முகப்பு /தென்காசி /

தென்காசியில் பெண்களுக்கு மாரத்தான்.. வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு..

தென்காசியில் பெண்களுக்கு மாரத்தான்.. வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு..

X
மாதிரி

மாதிரி படம்

Tenkasi Marathon : இலஞ்சி இராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் இருந்து வள்ளியூர் சந்திப்பு, பாரத் பள்ளி, விலக்கு பலாலி உணவகம், சிலுவை விலக்கு மேல இலஞ்சி வழியாக மீண்டும் இலஞ்சி இராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளியில் முடிவடைகிறது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • tenkasi, India

தென்காசியில் பெண்களுக்கு மாரத்தான். வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு. தென்காசியில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாரத்தான் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்தல், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளைஞர் நலன் (ம)விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சமூக நலன் (ம) மகளிர் உரிமை துறை இணைந்து மகளிர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகளை வருகிற 18 ஆம் தேதி நடத்துகிறது.

இந்த போட்டிகள் காலை 6.30 மணிக்கு இலஞ்சி இராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 5கி.மீ தூரம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மதுரை மக்களுக்கு குட்நீயூஸ் சொன்ன ரயில்வே.. வரும் 17ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்!

வழித்தடம்

இலஞ்சி இராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் இருந்து வள்ளியூர் சந்திப்பு, பாரத் பள்ளி, விலக்கு பலாலி உணவகம், சிலுவை விலக்கு மேல இலஞ்சி வழியாக மீண்டும் இலஞ்சி இராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளியில் முடிவடைகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    போட்டியில் அனைத்து வயது பிரிவு பெண்களும் பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1000, இரண்டாம் பரிசு ரூ.750, மூன்றாம் பரிசு ரூ.500 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் குளிர்பானம், குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்கள்.

    First published:

    Tags: Local News, Tenkasi