முகப்பு /தென்காசி /

நீங்கியது தடை... குற்றாலத்தில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

நீங்கியது தடை... குற்றாலத்தில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

X
குற்றாலத்தில்

குற்றாலத்தில் குளிக்க அனுமதி

குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி போன்றவற்றில நீர்வரத்து வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில், குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரிக்க ஆரம்பித்தது.

கடந்த சில மாதங்களாக குற்றாலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தால், அருவிகளில் நீர் வற்றிப்போய் பாறைகள் மட்டுமே காணப்பட்டன. இதனால், சுற்றுலா பயணிகள் கவலை அடைந்தனர்.

இந்நிலையில், தற்போது தென்காசி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால், குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி போன்றவற்றில நீர்வரத்து வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் குற்றாலத்தில் குளிக்க மக்களின் வருகையும் அதிகரித்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

பொதுவாக, குற்றால சீசன் மே மாத இறுதியில் தொடங்கி ஜூன், ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெய்து வரும் கனமழையால் மே மாத தொடக்கத்திலேயே குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 தற்போதும், தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து குவிந்து வருகின்றனர் குற்றால அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர்.

மேலும் கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் செய்து வந்த கனமழை காரணமாக, தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதனால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

top videos

    இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கே சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    First published:

    Tags: Local News, Tenkasi