தென்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் உலக அமைதி கோயிலில் நான்கு புத்தர் சிலைகள் நிறுவப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டத்தில் வீரிருப்பு கிராமம் அருகே பிரம்மாண்ட அளவில் புத்தர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதில் 120 அடி உயரத்தில் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டுள்ள உலக அமைதி கோபுரத்தில் புத்தர் சிலைகள் திறந்து வைக்கப்படும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் புத்தர் கோவில் அமைதியாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. கடந்த 2020 மார்ச் மாதம் 4ம் தேதி கோபுர உச்சியில் புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் இத்தாலி போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க : ஒரு லிட்டர் டீசலில் ரயில் எத்தனை கிலோ மீட்டர் ஓடும்னு தெரியுமா...? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!
இந்த உலக அமைதி கோபுரத்தில் தெற்கு திசையில் ஞானம் போதிப்பது போன்ற புத்தர் சிலையும், மேற்கு திசையில் சயன கோலத்தில் இருக்கும் புத்தர் சிலையும் ,வடக்கு திசையில் குழந்தை பருவத்தில் உள்ள புத்தர் சிலையும்,கிழக்கு திசையில் மக்களுக்கு அருளாட்சி வழங்குவது போன்ற புத்தர் சிலையும் நிறுவப்பட்டன. மேலும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், மற்றும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi