ஹோம் /தென்காசி /

தென்காசியில் அதிகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. இந்த வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?

தென்காசியில் அதிகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. இந்த வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?

மெட்ராஸ் ஐ

மெட்ராஸ் ஐ

Tenkasi News : தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிக அளவில் பரவும் மெட்ராஸ் ஐ. இதன் அறிகுறிகள் என்ன? மற்றும் இதிலிருந்து நம்மை காத்து கொள்வது எப்படி என்ற காணலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மழை காலங்கள் பரவும் நோய்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் இந்த மெட்ராஸ் ஐ. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இதன் தாக்கம் அதிக அளவில் இருக்கும்.

  மெட்ராஸ் ஐ என்றால் என்ன?

  விழி மற்றும் இமையின் இடையில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ எனப்படும். இது கண்ணின் வெண்படலத்தில் ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தும். கண்கள் சிவப்பாக காணப்படும் மேலும் கண்களில் ஒரு உறுத்தல் ஏற்படும். கண்களில் இருந்து அதிக நீர் வெளியேறுவது மற்றும் கண்களை சுற்றி வீக்கமாக காணப்படும்.

  தூங்கி எழுந்தவுடன் கண்களில் இருந்து வெளிவரும் கழிவுகளால் கண்களை திறப்பதில் சிரமம் ஏற்படும். லேசான கண்கள் எரிச்சல் தான் இதன் முதல் அறிகுறி.

  மெட்ராஸ் ஐ எப்படி பரவும்?

  வைரஸ் தொற்று இருக்கும் நபர் கண்ணை தொட்டவுடன் மற்றவர்களை தொட்டால் எளிதில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும். தொற்று இருக்கும் நபர் பயன்படுத்திய பொருட்களை மற்றவர் பயன்படுத்தினால் எளிதில் பரவும்.

  இதையும் படிங்க : சுரண்டை பேருந்து நிலையத்தில் துரத்தி, துரத்தி கல்லூரி மாணவர்களை புரட்டி எடுத்த மர்ம நபர்கள்...

  நோய் தொற்று இருப்பவர்களுக்கு மருந்து ஊற்றி விட்டு கைகளை கழுவாமல் நம் கண்களில் கைகளை வைத்தால் நிச்சயமாக இந்நோய் பரவும்.

  நாம் செய்யவேண்டியது என்ன?

  நோய் தொற்று ஏற்பட்டவுடன் உங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்கலாம். கண்களில் மேலும் அரிப்பை அதிகரிக்கும் உணவுகளைதவிர்க்க வேண்டும். அதாவது மீன், கருவாடு, சேனைக்கிழங்கு போன்ற அரிப்பை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

  கண்களில் கழிவுகள் சேர்ந்து கண்களை திறப்பதில் சிரமம் ஏற்பட்டால் ஒரு பருத்தி துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து அதை வைத்து கண்களை துடைத்து சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல் அடிக்கடி குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் கண்களை கழுவ வேண்டும்.

  மேலும் இந்த நோய் குறித்தும் அதிலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியவை குறித்து கண் மருத்துவர் சிவா கூறுகையில், “கண்களை தொடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். செல்போன், மடிக்கணினி, கணினி, தொலைக்காட்சி ஆகியவற்றை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

  இதனால் கண்கள் மேலும் சோர்வடையாமல் பாதுகாக்கலாம். மெட்ராஸ் ஐ உள்ளோருக்கு அதிக தூக்கம் மற்றும் ஓய்வு தேவை. தனியாக கைக்குட்டைகளை பயன்படுத்துவது நல்லது. அருகில் உள்ள மருத்துவரின் ஆலோசனை பெற்று கண் மருந்துகளை பயன்படுத்துவது சிறப்பு. இப்படி செய்தால் ஓரிரு நாட்களில் நோய் தொற்றிலிருந்து நாம் முழுவதுமாக மீள முடியும் ” என தெரிவித்தார்.

  இதையும் படிங்க : சிவனும் விஷ்ணுவும் ஒரே உருவமாகி பக்தர்களுக்கு காட்சி தரும் தென்காசி சங்கரநாராயணர் கோவிலின் சிறப்புகள்

  பொது இடங்களுக்கு நாம் செல்லும்போதும் அனைவரும் பயன்படுத்தும் பொருட்களை அதாவது பொது குடிநீர் குழாய், பேருந்து கம்பிகள், ஆகியவற்றை நாம் பயன்படுத்தும்போதும் கூடுதல் கவனத்துடன் இருந்தால் நோய் தொற்றிலிருந்து நாம் நம்மை காத்து கொள்ள முடியும்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  தென்காசி செய்தியாளர் - சுபா கோமதி

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Tenkasi