ஹோம் /தென்காசி /

குற்றாலத்தில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த ஐயப்ப பக்தர்கள்!

குற்றாலத்தில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த ஐயப்ப பக்தர்கள்!

அருவியில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்

அருவியில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்

அதிகளவில் கூட்டம் இருப்பதால், சரியாக குளிக்க முடியவில்லை என ஐயப்ப பக்தர்கள் கவலை.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

குற்றாலத்தில் குளிக்க ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தென்றல் தழுவும் தென்காசியில் அமைந்திருக்கும் குற்றாலத்தில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் முன்பு இங்கு வந்து குளித்துவிட்டு குற்றாலநாதர் கோவிலில் வழிபட்டு செல்வது வழக்கம்.

தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனிடையே அருவியில் குளிக்க கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. 300 பேர் வரை தாராளமாக குளிக்க கூடிய இட வசதி இருக்கும் மெயின் அருவியில் கூட்ட நெரிசல் காரணமாக காவல் துறையினர் ஐயப்ப பக்தர்களை வரிசையில் சென்று குளித்து செல்ல அறிவுறுத்தினர்.

ALSO READ | குற்றாலம் அருவிகளில் சில்லென்று கொட்டும் நீர்.... சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!

இதுதொடர்பாக பேசிய ஐயப்ப பக்தர் ஒருவர்  வருடாவருடம் இருமுடிக்கட்டி சபரிமலைக்கு செல்வோம். அப்போது வழியில் குற்றாலத்திற்கு வந்து குளித்து விட்டு குற்றாலநாதரைவணங்கி விட்டு பின் எங்கள் பயணத்தை தொடர்வோம். கொரோனா காலங்களில் இங்கு வருவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை வந்தும் கூட்ட நெரிசல் காரணமாகநீண்ட வரிசை இருந்தது. இதனால் எங்களை விரைந்து வெளியேற காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். இந்த முறையும் நிம்மதியாக குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் தான் திரும்பினோம் என்றார்.

செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.

First published:

Tags: Local News, Tenkasi