தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி சுற்றுவட்டாரத்தில் அதிக அளவில் எலுமிச்சை சாகுபடி நடைபெறும். சுமார் 30 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் புளியங்குடியில் நடைபெறும் எலுமிச்சை மார்க்கெட்டில் தங்கள் சாகுபடி செய்த எலுமிச்சைகளை ஏலம் விடுவதற்காக அதிக அளவில் வருகை தருவார்கள்.
பொதுவாக எலுமிச்சை அதிக அளவில் புளியங்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும். பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு புளியங்குடியில் இருந்து எலுமிச்சை ஏற்றுமதி நடைபெறும். புளியங்குடியில் இருந்து சென்னை மற்றும் பிற மாநிலங்களான கேரளா மகாராஷ்டிராவிற்கும் இங்கிருந்து எலுமிச்சை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கோடை கால விற்பனையில் கிலோ 110ல் இருந்து 115 வரை எலுமிச்சை ஏலம் விடப்பட்டு வருகிறது. இதுவே விளைச்சல் அதிகம் இல்லாமல் எலுமிச்சை தட்டுப்பாடு ஏற்பட்டால் பிற மாநிலங்களுக்கு கிலோ 150 வரை ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஒரு நாளைக்கு சராசரியாக சீசன் நேரங்களில் 50-லிருந்து 60 டன் எலுமிச்சை புளியங்குடியில் இருந்து மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அதுவே சீசன் இல்லாத நேரங்களில் 15 டன் இல் இருந்து 20 டன் வரை ஏற்றுமதி நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. எலுமிச்சையை பொறுத்தவரை வெயில் காலங்கள் தான் சீசன். மழைக்காலத்தில் எலும்பிச்சை சீசன் குறைவாகவே இருக்கும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
புளியங்குடி எலுமிச்சை மார்க்கெட்டில் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 10 மணியிலிருந்து 3 மணி வரை ஏலம் விடப்படும் இதற்காக சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து அதிக விவசாயிகளும் இங்கு வருகை புரிவார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi