ஹோம் /தென்காசி /

தென்காசியில் 108 விளக்குகளை வைத்து நடத்தப்பட்ட விளக்கு பூஜை... ஆர்வத்துடன் பங்கேற்ற சிறுமிகள்..

தென்காசியில் 108 விளக்குகளை வைத்து நடத்தப்பட்ட விளக்கு பூஜை... ஆர்வத்துடன் பங்கேற்ற சிறுமிகள்..

X
விளக்கு

விளக்கு பூஜை

Tenkasi District News : திருக்கார்த்திகேயன் முன்னிட்டு 108 விளக்கு பூஜை சங்கரன்கோவிலில் அமைந்திருக்கும் முப்புடாதி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் அமைந்திருக்கும் சங்கரநாராயணன் திருக்கோயிலின் துணைக்கோயிலான முப்புடாதி அம்மன் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு 108 விளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது.

இதுகுறித்து சங்கரன்கோயில் கிழக்கு வியாபாரி சங்க தலைவர் கணேசன் கூறுகையில், “இந்த 108 விளக்கு பூஜை சங்கரன் கோயில் கிழக்கு வியாபாரி சங்கத்தின் சார்பாக நடத்தப்படுகிறது. திருக்கார்த்திகையை முன்னிட்டு நடத்தப்படுகிறது. சிறு குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை இதில் ஆர்வத்தோடு பங்கேற்கின்றனர்.

இதை நாங்கள் தொடர்ந்து எல்லா வருடம் செய்து வருகிறோம். விளக்கு, வளையல், குங்குமம் போன்ற பொருட்களை கொண்டு பூஜைகள் செய்ய 108 பெண்கள் இதில் கலந்துகொண்டனர். இது முப்புடாதி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்றது,” என்றார்.

இதையும் படிங்க : வேலை தேடும் இளைஞர்களுக்கு நற்செய்தி...! தென்காசி மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்..!

மேலும், இந்த விளக்கு பூஜையில் முதன் முறையாக பங்கேற்ற சிறுமி வர்ஷிகா கூறுகையில், “இதுதான் எனக்கு முதல் விளக்கு பூஜை. நான் இதில் பங்கேற்றதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வளவு விளக்குகளை ஒரே இடத்தில் நான் பார்த்ததில்லை. இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது” என கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தென்காசி செய்தியாளர் - சுபா கோமதி 

First published:

Tags: Local News, Tenkasi