முகப்பு /தென்காசி /

சங்கரன்கோயில் திரௌபதி அம்மன் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற விளக்கு பூஜை!..

சங்கரன்கோயில் திரௌபதி அம்மன் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற விளக்கு பூஜை!..

X
விளக்கு

விளக்கு பூஜை

Thenkasi News | பெண்கள் அனைவரும் வரிசையாக விளக்குகள் ஏற்றி திரௌபதி அம்மன் படத்தை முன்பு வைத்து பூஜைகள் செய்தனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்திருக்கும் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் 108 விளக்குகள் கொண்டு விமரிசையாக பூஜை நடைபெற்றது.

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோயிலின் இரண்டாவது ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு ஹோமம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. மாலையில் திரௌபதி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதனைத் தொடர்ந்து பெண்கள் கலந்து கொண்ட 108 விளக்குகள் கொண்டும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது .பெண்கள் அனைவரும் வரிசையாக விளக்குகள் ஏற்றி திரௌபதி அம்மன் படத்தை முன்பு வைத்து பூஜைகள் செய்யத் தொடங்கினர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

First published:

Tags: Local News, Tenkasi