ஹோம் /தென்காசி /

ரோடும் இல்லை.. பஸ் வசதி இல்லை.. பாடலிங்க சாஸ்தா கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதி 

ரோடும் இல்லை.. பஸ் வசதி இல்லை.. பாடலிங்க சாஸ்தா கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதி 

குண்டும் குழியுமாக இருக்கும் மண் சாலை

குண்டும் குழியுமாக இருக்கும் மண் சாலை

Tenkasi news: மலையன்குளத்திஒல் அமைந்திருக்கும் பாடலிங்க சாஸ்தா கோவிலுக்கு செல்லும் வழியில் முறையான சாலை இல்லாததால் பக்தர்கள் அவதி.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி அம்பை அருகில் உள்ள மலையன்குளம் என்ற ஊரில் அமைந்திருக்கும் பாடலிங்க சாஸ்தா கோவிலுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் பக்தர்கள் அவதி.

ஆண்டுதோறும் ஆவணி ஓணம் திருவிழா பாடலிங்க சாஸ்தா கோயிலில் வெகுவிமர்சையாக நடைபெறும். இதில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருவது வழக்கம். பாடலிங்க சாஸ்தா கோயில் மலை அடிவாரத்தில் இயற்கை எழில் மிகு சூழலில் அமைந்திருக்கும். இந்த கோவிலுக்கு தனியார் பகுதி வழியாக தான் பயணம் செய்து வர முடியும்.

மிக குறுகலான குண்டும் குழியுமாக மணல் வழி பாதையில் தான் பயணிக்க முடியும். திருவிழா நேரங்களில் வேன், கார் போன்ற வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு இந்த கோயிலை அடைவது என்பதே மிகவும் சவாலான விஷயமாகி விடுகிறது.

மேலும் திருவிழா நேரங்களில் மட்டுமே இப்பகுதிக்கு பேருந்து வசதி உண்டு. மற்ற நேரங்களில் பக்தர்கள் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களில் மட்டுமே வர முடியும். இந்த கோயிலுக்கு செல்ல பேருந்துகள் மற்றும் சரியான சாலை வசதி வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Also Read: குற்றாலத்தில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த ஐயப்ப பக்தர்கள்!

இது குறித்து அந்த கோவிலின் மேலாளரிடம் கேட்டபோது, "பாடலிங்க சாஸ்தா திருக்கோவில் என்பதுஇப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு வெளிநாட்டில் இருந்தும் கூட பக்தர்கள் வருகின்றனர். மேலும் ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஆவணி ஓணம் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். இவர்களுக்கு முறையான சாலை வசதி இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து புகாரும் அளித்து உள்ளோம் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முறையான சாலை மற்றும் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

செய்தியாளர்: சுப கோமதி ( தென்காசி)

First published:

Tags: Local News, Tamil News, Tenkasi