ஹோம் /தென்காசி /

தென்காசியில் சுயம்பு சிவன் அமைந்த குற்றாலநாதரின் சிறப்புகள் தெரியுமா?

தென்காசியில் சுயம்பு சிவன் அமைந்த குற்றாலநாதரின் சிறப்புகள் தெரியுமா?

குற்றாலநாதர் கோயில்

குற்றாலநாதர் கோயில்

Tenkasi District News : குற்றாலம் செல்வதற்கு முன் பக்தர்கள் முதலில் சிவனை வழிபடுவது நல்லது என்று நம்பப்படுகிறது. பழங்கால தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தின் மீது ஆர்வமுள்ள அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  சிவனின் வழிபட்டு தலமான திருக்குற்றால நாதசாமி கோயில் மெயின் அருவிக்கு அருகில் இயற்கை எழில் சூழ அமைந்து இருக்கிறது.

  இக்கோயிலின் முக்கிய தெய்வம் திருக்குற்றாலநாதர் சுவாமி, தேவி அம்பாள் குழல் வாய்மொழி ஆவர். ஆதி பராசக்திக்கு ஒரு தனி சன்னதி உள்ளது. இது மிகவும் பிரபலமான சக்தி பீடமாக விளங்குகிறது.

  இக்கோயிலில் சுயம்புவாக சிவபெருமான் அருளி இருக்கும் அதாவது சுயமாக உருவானது சிவபெருமானின் சிலையை வைத்து இக்கோயிலில் வணங்குவர். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது போல சிவாலிங்க வடிவில் இருக்கும் பாறை கோயில்களில் உள்ளது.

  குற்றாலம் செல்வதற்கு முன் பக்தர்கள் முதலில் சிவனை வழிபடுவது நல்லது என்று நம்பப்படுகிறது. முன்னொரு காலத்தில் இக்கோயில் வைஷ்ணவர்களின் கோயிலாக இருந்தபோது சங்கு வடிவில் கோயில் அமைந்து இருக்கும்.

  இதையும் படிங்க : தென்காசியில் அதிகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. இந்த வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?

  இந்த வடிவத்தை செண்பக தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் பக்தர்கள் பார்க்கலாம். ஆரம்பகால திருக்குற்றாலநாதர் கோயிலை கட்டிய மன்னன் ராஜராஜ சோழன் என்று குறிப்புக்கள் உள்ளது.

  குற்றாலநாதர் கோயில்

  அர்த்தமண்டபம், மகாமண்டபம், அம்மனுக்கு தனி கோயில் மற்றும் பல கட்டிடங்கள் பாண்டியர் ஆட்சியில் கட்டப்பட்டு இருக்கிறது. மேலும், நாயக்கர் ஆட்சி காலங்களின்போது கட்டப்பட்ட பராசக்தி கோயில், சுற்றுச்சுவர், சங்கு சாலை, உள் வீதி மற்றும் சில கோயில்களும் உள்ளது.

  இக்கோயிலில் காலை 8 மணி முதல் 12 மணி வரையும் மேலும் மதியம் 4 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. 10 நாட்கள் பராசக்திக்கு நடக்கும்.

  குற்றாலநாதசாமி கோயிலில் விஷ்ணு, காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, தென்காசி விஸ்வநாதர் சுவாமி, உலகம்மை அம்பிகை, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள், நவக்கிரகங்கள் உள்ளன.

  இதையும் படிங்க : பழைய குற்றாலம் அருவி குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்தமான அருவியாக இருப்பதன் ரகசியம்..

  வல்லப கணபதி இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். கோயில் பிரகாரத்தில் முருகப்பெருமான் கையில் வில்லுடன் தன் துணைவிகளான வள்ளி, தேவசேனாவுடன் காட்சியளிக்கிறார். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் இக்கோயிலை பற்றி பாடி உள்ளனர்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  குற்றாலநாதர் கோயிலுக்கு அருகில் தமிழக அரசின் தொல்லியல் துறையின் நாட்டுப்புற கலை அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. பழங்கால தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தின் மீது ஆர்வமுள்ள அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது.

  செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Tenkasi