தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூரில் அமைந்திருக்கிறது ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த சிவன் கோவில். இதை ராமாயண காலத்தில் வாலி கட்டியுள்ளார் என செவிவழி செய்திகள் கூறுகிறது. வாலி ராமாயணம் வரும் ஒரு கதாபாத்திரம் ஆகும். வானரம் வாலி கிஷ்கிந்தையின் அரசன். மேலும் வாலி தனக்கு வேண்டிய வரங்களைப் பெற தேவலோக அரசன் இந்திரன் குறித்து தவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தாரை இவனது மனைவி. அங்கதன் இவர்களது மகன். இவன் சுக்கிரீவனுக்கு மூத்த சகோதரனும் சிறந்த வீரனும் ஆவான். எதிரில் நிற்கும் எதிரியின் பலத்தில் பாதி தனக்கு சேருமாறு வரம் பெற்றவன் வாலி. சுக்கிரீவனை கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்டவதற்கு ஏதுவாக, வாலியை மறைந்திருந்து ராமன் வதம் செய்கிறார்.
இது வாலியின் வரலாறு. இந்த மாவீரன் வாலி தான் இந்த கோயிலை இராமாயண காலத்தில் வாலி வந்து பிரதிஷ்டை செய்தது என்று செவி வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்காசி பெரிய கோவிலுக்கு முன்னரே தோன்றிய கோவில் தான் இந்த சிவன் கோவில் என்று கூறப்படுகிறது.
வாலி காலையில் பிரம்மதேசத்தில் பூஜையை முடித்த பின்னர் மதிய பூஜைக்காக கீழப்பாவூர் வருவார் எனவும், கீழப்பாவூரில் அமைந்திருக்கும் அனுமன் நதியில் நீராடி விட்டு மண்ணினால் ஒரு சிவனை பிடித்து வைத்து வணங்கினார் என கூறப்படுகிறது.
அதன் பிறகு இப்பகுதி ஆண்ட மன்னர் அங்கு ஒரு கோவில் கட்ட முடிவு செய்தார் என்றும் அப்படி கட்டப்பட்டது தான் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில் என இந்த கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சிவாலயத்தில் சிவனுக்கு வலது புறத்தில் இருக்கும் அம்மன் சன்னதியில் அம்பாள் கல்யாண கோலத்தில் காட்சியளிப்பார். அம்பாளை வழிபடுவதன் மூலம் கல்யாண தடை நீங்கும் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேலும் இந்த ஆலயத்தில் பைரவர், கணபதி, மீனாட்சி சுந்தரேசன், தக்ஷிணாமூர்த்தி ஆகிய கடவுள்களுக்கு தனித்தனியே சன்னதிகள் இருக்கிறது. நவகிரகங்களில் இருக்கும் சூரியன் சந்திரன், சனி ஆகிய கடவுள்கள் தனியாகவும் சன்னதிகள் அமைந்திருப்பது இந்த கோவிலின் சிறப்பாகும்.
சிவனுக்கு விசேஷமாக சிவராத்திரியும் அம்பாளுக்கு விசேஷமான நவராத்திரியும் இங்கு கோலாகலமாக நடைபெறும். மேலும் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மற்றும் ஆனி உத்திரத்திலும் பூஜைகள் இங்கு மிகவும் விசேஷமாக நடைபெறும்.
மேலும் முருகனுக்கு கார்த்திகை பூஜை மற்றும் ஆடி கிருத்திகை வெகு விமர்சையாக நடைபெறும்.மேலும் இந்த கோவிலில் அமைந்திருக்கும் நந்திகேஸ்வரர் கைகளைக் கூப்பி நிற்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பாகும்.
நந்திகேஸ்வரருக்கு பிரதோஷம் தோறும் வழிபாடுகள் செய்யப்படும். பொதுவாக சிவன் கோவில்களில் ஆஞ்சநேயர் சிலை இருப்பது அரிது ஆனால் வாலி வந்து வழிபாடு செய்ததால் இந்த கோவிலில் ஆஞ்சநேயர் சிலை இருக்கிறது என்று கூறப்படுகிறது.
மேலும் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில் பல கல்வெட்டுகளும் இடம் பெற்று இருக்கின்றது. இந்த சிவன் கோவிலில் நடைபெறும் பூஜைகள் இந்த இடத்தில் வைத்து நடைபெறுவது வழக்கம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மன்னர் பரிசாக தந்த வெங்கல நடராஜர் சிலை இங்கு வைத்து வழிபட்டு வருகின்றனர். இத்தனை சிறப்புமிக்க கீழப்பாவூரில் இருக்கும் சிவன் கோவிலை தவறாமல் சிவராத்திரியில் தரிசனம் செய்து வாருங்கள்.
செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi