தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பெரிய பள்ளிவாசல் சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாகும். மேலும் பிற தர்காக்களில் இல்லாத சிறப்பம்சம் என்னவென்றால் இங்கு தர்காவுக்கு சொந்தமாக யானையும் உண்டு. மேலும் தர்காவிற்கு அருகில் யா முஹம்மத் சமாதியும் வைக்கப்பட்டிருக்கும். இங்கு வந்து அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்வது வழக்கம். பத்திகளை அங்கு வைக்கப்பட்டிருக்கும் விளக்கில் ஏற்றி வைத்து தங்களது வேண்டுதல்களை வைப்பார்கள். இந்த கந்தூரி விழாவானது 15 நாட்கள் நடக்கும் ஒரு திருவிழாவாகும்.
மேலும் இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வர். எனவே கடையநல்லூரில் இருக்கும் பெரிய பள்ளி வாசல் மத ஒற்றுமைக்கான அடையாளமாக திகழ்கிறது. கடையநல்லூரில் இருக்கும் பெரிய பள்ளிவாசலை சுற்றி பல கடைகளும் ராட்டினங்களும் போடப்பட்டிருக்கும். 10வது நாள் திருவிழா கொடி ஊர்வலத்துடன் தொடங்கும். மேலும் இந்த தர்காவில் இருக்கும் யானைக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு யானை மேல் கொடி ஏற்றி ஊர்வலமாக வரும். மாலை 6 மணிக்கு மேல் சந்தனக்கூடு ஊர்வலமும் நடைபெறும்.
திருநாள் அன்று 2 கொடிகளுக்கு சந்தனங்கள் பூசப்பட்டு மாலைகள் கட்டப்பட்டு ஒரு கொடியை மரத்தின் மேல் கட்டி அடுத்த வருடமே கீழே இறக்குவர். மற்றொரு கொடியை யானை மீது சுமந்து ஊர் மூலமாக வருவது வழக்கம். அங்கு வந்து இருக்கும் மக்கள் அனைவருக்கும் நேரச்சை சோறு வழங்கப்படும். இது உணவு மற்றும் அன்பை பரிமாறிக் கொள்ளும் விதமாக வழங்கப்படுகிறது. சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்த கந்தூரி விழா நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi