முகப்பு /தென்காசி /

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உளுந்தங்களி, வெந்தையகளி செய்வது எப்படி? சங்கரன்கோவில் வியாபாரியின் சமையல் டிப்ஸ்..

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உளுந்தங்களி, வெந்தையகளி செய்வது எப்படி? சங்கரன்கோவில் வியாபாரியின் சமையல் டிப்ஸ்..

X
உளுந்தங்களி

உளுந்தங்களி செய்வது எப்படி?

Tenkasi News | உடலுக்கு ஆரோக்கியம் தரும் உளுந்தம் களி மற்றும் வெந்தயக்களி செய்வது எப்படி என சங்கரன்கோவில் வியாபாரி செல்லும் சமையல் டிப்ஸ்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் மிக முக்கியமானவை உளுந்தம் களி மற்றும் வெந்தயக்களி. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கனரா பேங்க் முன்பு வைக்கப்பட்டிருக்கும் இயற்கை மூலிகை சூப் கடைகளில் கிடைக்கும் களி வகைகள் பற்றியும், அதனை தயார் செய்யும் முறைகளை பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

வெந்தைய களிக்காக வெந்தயமும் அரிசியும் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்கின்றனர். உளுந்தங்களிக்கு உளுந்தை மாவாக அரைத்து அதனை பயன்படுத்துகின்றனர். மேலும் இரண்டு களிகளுக்கும் இனிப்பிற்காக மண்ட வெல்லம் சேர்க்கப்படுகிறது. இதனை காட்சி பாகு எடுத்து அதனை களியோடு கலக்கின்றனர். களியை கலக்கும்போது இடையில் நல்லெண்ணெயும் பயன்படுத்துகின்றனர். இது களியில் ருசியையும் ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்துகிறது. மேலும் இது 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

First published:

Tags: Local News, Tenkasi