தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள கல்லாறு கோடை வெயிலில் நாம ஜில் (Chill) பண்ண சரியான லொகேஷன். கடையநல்லூர் ஹாஸ்பிடல் பஸ் நிறுத்தத்துக்கு அருகில் உள்ள பிரின்ஸ் ஹாஸ்பிடல் சாலையில் 7 கிலோ மீட்டர் சென்றால் இந்த கல்லாறுக்கு போகலாம்.
செல்லும் வழி முழுவதும் பச்சை கம்பளம் போர்த்தியதுபோல் மலையும், வயலையும் உங்களால் பார்க்க முடியும். அதுவும் சூரியன் மறையும் நேரத்தில் சென்றால் இன்னும் ரொம்ப நல்லா இருக்கும். செல்லும் வழி முழுவதும் பச்சை பசேல் என்ற வயல்கள், தென்னை மரங்கள், வாழை தோப்பு என 2 புறமும் பார்த்துகிட்டே போகலாம்.
சுமார் 4 கிலோமீட்டர் பெரிய ஆற்றை வந்தடையலாம்.
தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளதால் இங்கு அந்த அளவுக்கு தண்ணீர் இல்லை. ரொம்ப குறைவான அளவில் தான் தண்ணீர் வந்துட்டு இருக்கு. வயலில் பயிர்களை அறுக்குற பெரிய பெரிய வண்டிகளை கூட இங்கு வந்துதான் சுத்தம் செய்கின்றனர். இந்த இடத்துக்குன்னு எந்த பேருந்து வசதியும் கிடையாது. பைக் அல்லது ஆட்டோவில் தான் இந்த இடத்துக்கு வர முடியும். தண்ணீர் கம்மியா வந்துட்டு இருக்கு. அதனால பெரிய ஆற்றை கடந்து பைக்கில் சென்றோம்.
இதையும் படிங்க : கானா பாடல்கள் பாடி கோவை குணாவின் நண்பர்கள் இறுதி அஞ்சலி...
தண்ணி ரொம்ப வந்துட்டு இருந்துச்சுன்னா இங்க பார்க் பண்ணிட்டு உள்ள 4 கிலோ மீட்டர் நடந்து தான் போகணும். போற வழியில் அங்க அங்க நீரோடைகளையும் பார்க்க முடியும். அங்கேயும் ரொம்ப குறைவான அளவில் தான் தண்ணீர் வந்துட்டு இருந்தது.
அதுக்கப்புறம் ஃபுல்லாவே ஒத்தையடி பாத மாதிரி தான் ரோடு போயிட்டு இருந்துச்சு. போகப் போக இன்னும் மலைக்கு ரொம்ப நெருக்கமா போற மாதிரியே இருக்கும். சூரியனும் மரங்கள் இடையில ஒளிந்து ஒளிந்து கண்ணாமூச்சி விளையாட்டு காட்டிட்டு இருந்துச்சு.
கல்லாறை நெருங்கும்போது சாலை இல்லாம மண் ரோட்ல தான் போற மாதிரி இருக்கும். அதிக அளவுல இங்க கற்களை பார்க்க முடியும் வெயில் காலம் என்பதால் தண்ணீரை விட கல்லு தான் அதிகமா இருந்துச்சு. இந்த இடத்திலேயே இன்னும் கொஞ்சம் உள்ள போகணும்னா தண்ணி கொஞ்சம் ஆழமா இருந்துச்சு அங்க சின்ன புள்ளைங்க எல்லாம் குளிச்சிட்டு இருந்தாங்க. அமைதியா அந்த கல் மேல உக்காந்துட்டு நீரோட சத்தம்கேட்டா ஒரு ரம்யமான உணர்வு கொடுத்துச்சு. இந்த தண்ணி எல்லாமே மலையில் இருந்து வர்றதா சொல்றாங்க அதனாலயே என்னவோ தண்ணீர் எல்லாமே ரொம்ப குளுகுளுன்னு இருந்துச்சு.
முக்கியமாக தண்ணீர் கம்மியா வருவதனால் தான் இந்த பகுதிகளுக்கு எல்லாம் பைக்ல நம்மளால போயிட்டு வர முடியுது இல்லன்னாநடந்து தான் போகணும். இன்னும் தண்ணீர் போற பாதையை தொடர்ந்து போயிட்டு இருந்தோம்னா மலைக்கு ரொம்ப கிட்டவே போயிடுவோம். சாயங்கால நேரத்துல சூரியன் அஸ்தமனம் ஆகும்போது அந்த அழகே நமக்கு மூணு வண்ணங்களாக தெரிஞ்சுச்சு.
நிறைய பகுதிகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்த இருந்துச்சு சீசன் டைம்ல இங்க வந்தோம்னா ரொம்ப நல்லாவே இருக்கும்னு இந்த பகுதி மக்கள் சொல்றாங்க. தண்ணீரை தொடர்ந்து போயிட்டே இருந்தப்போ கடைசியா இந்த இடத்துக்கு வந்துட்டோம் இங்கே அவ்வளவு ஆள் நடமாட்டம் இல்லாததுனால மீன்கள் எல்லாம் அதிக அளவுல பார்க்க முடிஞ்சிச்சு. இந்த மீன்கள் எல்லாமே நமக்கு பார்லரில் பண்றது மாதிரி ஃப்ரீயாவே pedicure பண்ணி விட்டு இருந்துச்சு.
இந்த இடத்துல போக போக தண்ணி ஆழமாகிட்டே இருந்துச்சு நம்ம இடுப்பு அளவுக்கு தண்ணி இந்த இடத்தில் இருந்துச்சு.
கல்லுக்கு நடுவுல அங்கங்க ஓடுற தண்ணியோட சத்தத்தை கேட்பதற்கே ஒரு மன அமைதி இருந்துச்சி. எந்த இடத்துக்கு ஆறு மணிக்கு மேல வர்றது அவ்வளவு சேஃப் கிடையாதுன்னு சொல்றாங்க யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக இந்த இடத்துக்கு வரணும் இந்த ஊர் மக்கள் சொல்றாங்க. அதனால முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமாகவே இங்க இருந்து கிளம்பிருங்க.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கல்லாறுக்கு வந்தாச்சு அப்படியே அங்க இருக்கிற கல்லுல உக்காந்துகிட்டு கடையநல்லூர் பரோட்டாவ மலையை பார்த்துட்டு சாப்பிடுவதற்கு அப்பா அப்படி ஒரு டேஸ்ட். இந்த மாதிரி இயற்கையான இடத்துக்கு வரும்போது நீங்க கொண்டு வந்த பொருட்கள் அவர் எதையுமே அங்க போட்டுட்டு போயிடாதீங்க முடிஞ்ச அளவுக்கு எடுத்துட்டு போய் குப்பை தொட்டியில் போடுங்க. நாங்களும் சாப்பிட்டு முடிச்சிட்டு அந்த வேஸ்ட் பேப்பர் எல்லாம் ஒரு பார்சல் பண்ணிட்டு குப்பைத்தொட்டியில போட்டுட்டு கிளம்பிட்டோம்.
இந்த சம்மருக்கு நீங்களும் கல்லாருக்கு ஒரு ட்ரிப் போயிட்டு வாங்க அடிக்கிற வெயிலுக்கு ஒரு குளு குளு குளியல் போட்டா நல்லா தானே இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi, Travel