ஹோம் /தென்காசி /

தென்காசியில் பொங்கலை முன்னிட்டு மல்லிகை பூ கிலோ ரூ.4,500-க்கு விற்பனை- ஷாக்கான பொதுமக்கள்

தென்காசியில் பொங்கலை முன்னிட்டு மல்லிகை பூ கிலோ ரூ.4,500-க்கு விற்பனை- ஷாக்கான பொதுமக்கள்

X
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் பூ சந்தை

Tenkasi | தென்காசியில் மல்லிகைப் பூவின் விலை கிலோவுக்கு 4,500 ரூபாய்க்கு விற்க்கப்பட்டாதல் பொதுமக்கள் ஷாக்கடைந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைந்ததால், பொங்கலை முன்னிட்டு பூக்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டியும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

பூக்களின் வரத்து குறைவாலும் , தேவை அதிகம் ஏற்பட்டுள்ளதாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

மல்லிகை பூ, பிச்சிப் பூ ஆகிய பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். தற்போது குண்டுமல்லி சீசன் இல்லாத காரணத்தால் மல்லிகைப் பூவின் விலை உச்சத்தை தொட்டு உள்ளது.

மல்லிகை பூ கிலோ 4,500 ரூபாய்க்கும், முல்லை அரும்பு கிலோ 2,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சாமந்தி, கேந்தி பூ, கோழி கொண்டை பூ போன்றவைகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இயங்க கூடிய பல்வேறு சில்லரை மலர் அங்காடிகளில் குண்டு மல்லி, முல்லை பூக்களின் விலை அதிகரித்ததால், அதிகம் பூக்கள் வாங்கும் பொதுமக்கள் தற்போது குறைவாகவே பூக்கள் வாங்கி செல்கின்றன என வியாபாரிகள் தெரிவித்தனர்.

செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.

First published:

Tags: Local News, Tenkasi