தென்காசி மாவட்டம் பனையூரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார் கார்த்திக். இவர், தனது தந்தையின் நிலத்தை ஐ.டி-யில் பணிபுரிந்து கொண்டே ஆர்கானிக் விவசாயம் செய்து வருகின்றார். இவர், தென்னை மரத்திற்கு ஊடுபயிராக கோகோ வளர்ப்பதோடு தேன் வளர்ப்புக்கான பெட்டிகளும் வைத்திருக்கின்றார்.
கார்த்திக்கின் தந்தை தேங்காய் ஆகியவற்றை வெளியில் விற்பனை செய்து வந்த நிலையில், இவ்வாறு வெளியில் விற்பனை செய்வதற்கு பதிலாக, அதனை வைத்து மதிப்பு கூட்டும் பொருளை நாமே தயாரிக்கலாம் என்று முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளார் கார்த்திக். மேலும், அதிலிருந்து தயாரிக்கப்படும் தேன், தேங்காய் எண்ணெய், ஆயில்மெண்ட் பட்டர், டேட்ஸ் ஹனி என பலவற்றை ஆன்லைனில் விற்பனையும் செய்து வருகிறார்.
இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அரசு தரப்பில் லோன் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் தோட்டக்கலை துறை (Horticulture department) தனக்கு பெரிதும் உதவியதாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், ஐ.டி.யில் சம்பாதிக்கும் அளவு இயற்கை விவசாயத்திலும் சம்பாதிக்க முடியும் அதற்கான பொறுமை மற்றும் விடாமுயற்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் விவசாயம் செய்யலாம் என்று இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார் கார்த்திக்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi