ஹோம் /தென்காசி /

சர்வதேச கூடைப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தென்காசி வீராங்கனை

சர்வதேச கூடைப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தென்காசி வீராங்கனை

கனகலட்சுமி

கனகலட்சுமி

சர்வதேச சக்கர நாற்காலி கூடைபந்து போட்டியில் கலந்துக்கொண்டு வெள்ளி பதக்கம் வென்றார் தென்காசி விராங்கனை கனக லட்சுமி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் இலஞ்சியை சேர்த்தவர் கனகலட்சுமி. மாற்றுத்திறனாளியான இவருக்கு கூடைபந்து மீது தீராத காதல் வந்தது. அதன் பின்னர் தன்னுடைய உடல்இயலாமையையும் பொருட்படுத்தாது சக்கர நாற்காலியில் இருந்துக்கொண்டே கூடைபந்து பயிற்சி எடுத்தார்.

கடின உழைப்பும், விடா முயற்சியும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவருக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது. சக்கர நாற்காலி கூடைபந்து போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக மாநில அளவில் வளம் வர தொடங்கினார்.

மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளின் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று குவித்தார். சென்னை, டெல்லி, ஐதரபாத், ஈரோடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேசிய போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கங்களை தவறாது வென்றார்.

வெள்ளிப்பதக்கம் வென்ற தென்காசி வீராங்கனை

இதையும் படிங்க : தென்காசி மாவட்டத்தில் நாளை (3.12.2022) பல்வேறு இடங்களில் மின் தடை அறிவிப்பு

 கனகலட்சுமி இரண்டு தடவை சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இரண்டு முறை சர்வதேச முகாமில் (camp) பங்கேற்று உள்ளார். இந்த ஆண்டு நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு நேபாளை வீழ்த்தி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இந்திய அணிக்காக பங்கேற்ற ஒரே ஒரு பெண் கனகலட்சுமி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வெள்ளிப்பதக்கம் வென்ற தென்காசி வீராங்கனை

சர்வதேச போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற இவரது சாதனையை பாராட்டி தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கனகலட்சுமியை பாராட்டினார். சாதனைகள் தொடரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி

First published:

Tags: Local News, Sports, Tenkasi