முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவிலில் பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பம், கேரம், செஸ் போட்டிகள்..

சங்கரன்கோவிலில் பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பம், கேரம், செஸ் போட்டிகள்..

X
சங்கரன்கோவிலில்

சங்கரன்கோவிலில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள்

Tenkasi News : சங்கரன்கோவிலில் பள்ளிகளுக்கு இடையேயான கேரம், செஸ் மற்றும் சிலம்பம் என பல போட்டிகள் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் கேரம், செஸ், சிலம்பம் என 3 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. 10க்கும் மேற்பட்ட பள்ளியில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். மேலும் 3 மற்றும் 4ம் வகுப்புகள், 5 மற்றும் 6ம் வகுப்புகள், 7 மற்றும் 8ம் வகுப்புகள் என பிரித்து 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

சிலம்பத்தில் track மற்றும் circle என இருவிதமாக போட்டிகள் நடைபெற்றது. மேலும் கேரம்போர்டு மற்றும் செஸ் போட்டிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதையடுத்து, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Tenkasi