முகப்பு /தென்காசி /

தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

X
குற்றாலத்தில்

குற்றாலத்தில் நீர்வரத்து (மாதிரிப்படம்)

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வபோது சாரல் மலையின் கனமழையும் பெய்து வந்த நிலையில் குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவியில் ஜுன், ஜுலை, ஆகஸ்ட் உள்ளிட்ட மாதங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்.

இந்நிலையில் தற்போது கோடை காலம் என்பதால், குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து குறைந்திருந்தது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக குற்றாலத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் அனைத்து அருவிகளிலும் நீர் வற்றிபோய் பாறைகள் மட்டுமே காணப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது தென்காசி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் மெயின் அருவி, பழைய அருவி ஆகிய அருவிகளில் நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளது.

 ஆண்டுதோறும் ஜூன் முதல் மூன்று மாதங்கள் சீசன் உள்ள நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி தீவிரமடைந்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்ட துவங்கியுள்ளது.

top videos

    இதனால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் சீசன் காலம் மே மாத இறுதியில் ஜூன், ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே இருக்கும் நிலையில், தற்போது ஏப்ரல் மாதத்தில் பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    First published:

    Tags: Local News, Tenkasi