பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் பணியை உதறி “கேக் மேக்கிங்”கில் ஈடுபட்டுள்ளவர் தான் கற்பகவல்லி. பேக்கிங்கில் அவருக்கு எப்படி இவ்வளவு ஆர்வம் ஏற்பட்டது? மாதாமாதம் சரியாக சம்பளம் வரும் வேலையை இவர் வேண்டாம் எனக்கூற காரணம் என்ன? இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோயிலில் வசிப்பவர் கற்பகவல்லி, இவர் தனது பேராசிரியர் பணியை விட்டுவிட்டு வீட்டிலேயே கேக் தயாரிக்கும் பேக்கிங் தொழிலில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நான் எம். இ. படிப்பை முடித்துவிட்டு தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வந்தேன். எனது சகோதரியின் குழந்தைக்கு வெளியில் கடைகளில் விற்கப்படும் கேக்கலினால் அலர்ஜி ஏற்பட்டதை தொடர்ந்து வீட்டில் தானாகவே கேக் தயார் செய்ய தொடங்கினேன்.
அதன் பிறகு கிறிஸ்மஸ் நேரங்களில் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எல்லாம் நானே கேக் செய்து சாப்பிட்டு பார்க்கும்படி வழங்கினேன். என் கேக்கை விரும்பிய அவர்கள் என்னிடம் பணம் பெற்று வாங்க தொடங்கினர்.
முதல் கேக்கில் 2500 ரூபாய் லாபம் சம்பாதித்தேன். அதன் பிறகு வலைதளங்களில் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் மூலம் சங்கரன்கோவில் பகுதியில் பிரபலமடைந்தேன். எனது தயாரிப்பின் தனித்துவம் வீட்டில் தயாரிக்கும் கேக் என்பதும் வாடிக்கையாளர்களுக்கு பிடித்தபடி கேக்கை அலங்கரித்துக் கொடுப்பதும் ஆகும்.
ஆரம்ப காலங்களில் 15 ஆயிரம் ரூபாய் வைத்து தான் இந்த கேக் தொழிலை ஆரம்பித்தேன். கேக் செய்ய அடிப்படையாக தேவைப்படும் பொருட்களை மட்டும் வாங்கி கேக்குகளை தயார் செய்தேன். முதல் கேக் ஆர்டரிலேயே 2500 ரூபாய் வரை லாபம் சம்பாதித்தது என்னை ஊக்கப்படுத்தியது.
1500 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரை ஒரு கேக்கில் மட்டுமே லாபம் சம்பாதிக்க என்னால் முடியும். சாதாரண கேக் வகைகள் 750 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
நான் முன்னர் செய்து வந்த வேலையை விட இது எனக்கு இது மிகவும் பிடித்ததாகவும், எளிமையாகவும் இருக்கிறது. என் வீட்டில் இருக்கும் நபர்களுடன் நேரத்தை செலவழித்துக் கொண்டே என் தொழிலையும் பார்க்க முடிகிறது. மேலும் இதில் எனக்கு அதிக லாபமும் வருகிறது” என்றார் கற்பகவல்லி.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சவால்களை தகர்த்து, சாதனைகள் பல படைக்க, உறுதியான மனமும் உயர்வான எண்ணமும் கொண்டு இருந்தால் பெண்கள் தனக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து அதில் நிச்சயம் சாதிக்கலாம் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் கற்பகவல்லி.
செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi