ஹோம் /தென்காசி /

குற்றாலம் அருவியில் குளித்து கொண்டிருந்தபோது சுற்றுலா பயணிகள் மீது விழுந்த உடும்பு..

குற்றாலம் அருவியில் குளித்து கொண்டிருந்தபோது சுற்றுலா பயணிகள் மீது விழுந்த உடும்பு..

சுற்றுலா பயணிகள் மீது விழுந்த உடும்பு

சுற்றுலா பயணிகள் மீது விழுந்த உடும்பு

Tenkasi District News : குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துகொண்டு இருக்கும் போது உடும்பு வந்து விழுந்தது. அப்போது அருவியில் குளித்து கொண்டு இருந்த சுற்றுலா பயணிகளுக்கு அச்சத்தில் பதறினர்.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துகொண்டு இருக்கும்போது திடீரென உடும்பு ஒன்று தண்ணீரில் அடித்துக்கொண்டுவந்து விழுந்தது. அப்போது அருவியில் குளித்து கொண்டு இருந்த சுற்றுலா பயணிகளுக்கு அச்சத்தை உண்டாக்கியது.

  கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் குற்றாலத்திற்கு வருவது வழக்கம். அதே போல ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் குளித்து கொண்டு இருந்த குற்றால மெயின் அருவியில் உடும்பை கண்டவுடன் சுற்றுலா பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்பட்டது.

  மெயின் அருவியில் இருந்து தண்ணீர் அடித்து செல்லக்கூடிய இடத்தில் இந்த உடும்பை கண்டு சுற்றுலா பயணிகள் உடனடியாக வனத்துறையினருக்கு எச்சரிக்கை செய்தனர். அதனை தொடர்ந்து உடனடியாக வனத்துறையினர் வந்து உடும்பை மீட்டு காட்டு பகுதியில் விட்டுச்சென்றனர்.

  இதையும் படிங்க : தென்காசியில் புலி அருவிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

  குற்றால அருவியில் இதற்கு முன்பே இது போன்று சில விலங்குகள் விழுந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  தென்காசி செய்தியாளர் - சுபா கோமதி

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Tenkasi