முகப்பு /தென்காசி /

தென்காசி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. உடனே இதை செய்து பயன் பெறுங்கள்!

தென்காசி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. உடனே இதை செய்து பயன் பெறுங்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

Tenkasi news | தென்காசி மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினராக பதிவுசெய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tenkasi, India

தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன் பேணி காக்கும் பொருட்டு தமிழ்நாடுகட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் இதர 17 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது.

நலவாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கைமரணம், விபத்துமரணம், ஓய்வூதியம், குடும்பஓய்வூதியம் மற்றும் பணியிடத்து விபத்துமரணம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி திட்டமும் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

மேற்படி அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை கடந்த 19.06.2020 முதல் இணையதளம் வழியாக நடைபெற்றுவருகிறது. மேலும், நலவாரியங்கள் மூலம் வழங்கப்படும் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்புமனுக்கள் பெறுதல் போன்ற அனைத்து சேவைகளும் இணையதளம் வழியாக வழங்கப்பட்டுவருகிறது.

நலவாரியங்களில் உறுப்பினராக சேர்வதற்கு பணிச்சான்று, ஆதார் அட்டை, குடும்பஅட்டை, வங்கிகணக்கு புத்தகம், வயதுக்கான சான்று, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் போன்ற ஆவணங்களுடன் http://www.tnuwwb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவுகோரி விண்ணப்பித்து கொள்ளலாம்.

ALSO READ | தென்காசியில் அதிகரிக்கும் கொரோனா.. முகக்கவசம் கட்டாயம்.. அதிரடி அறிவிப்பு!

ஏற்கனவே கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினராக பதிவுசெய்து கொண்டவர்கள் தங்களது பதிவினை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இணையதளம் வழியாக பதிவை புதுப்பித்துகொள்ளவேண்டும்.

எனவே, தென்காசி மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 59 வயதுக்குற்பட்ட தொழிலாளர்கள் மேற்கண்டவாறு நலவாரியங்களில் உறுப்பினராக பதிவுசெய்து வாரியங்கள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Tenkasi