ஹோம் /தென்காசி /

குற்றால அருவிக்கு குளிக்கப் போறீங்களா? அப்படினா இதை முதலில் படிங்க!

குற்றால அருவிக்கு குளிக்கப் போறீங்களா? அப்படினா இதை முதலில் படிங்க!

Courtallam falls

Courtallam falls

courtallam falls | தென்காசி மாவட்டம் குற்றால அருவிக்குச் சென்று இன்று குளிக்க திட்டமிட்டிருந்தால், முதலில் இதை படித்துவிட்டு பின்னர் முடிவெடுங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது குற்றாலம் அருவி. ‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்று அழைக்கப்படும் மூலிகை குணம் நிறைந்த இந்த அருவியில் வருடத்தின் சில மாதங்கள்தான் தண்ணீர் கொட்டும். அதுமட்டும் அல்லாது, அதிக மழைபொழிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்படும். எனவே, குற்றாலத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா, குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா என்பதை தெரிந்துகொண்டு இங்கே வருவதே சரியாக இருக்கும்.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை, தென் மேற்கு பருவமழை காரணமாக அருவிகளில் தண்ணீர் கொட்டும், மிதமான வெப்பநிலை, உடலை வருடிச்செல்லும் குளிர் காற்று என குற்றாலம் அருவி களைகட்ட தொடங்கிவிடும். இந்த சீசனில் அருவிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

இதேபோல, அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்வது வழக்கம். இந்த காலத்தில் அருவிகளில் வெள்ளம் பெருக்கு ஏற்படுவதால் அவ்வப்போது மக்கள் குளிக்க அனுமதிக்கபடுவதில்லை.

அதன்படி இந்த டிசம்பர் மாதத்தில் பலமுறை இந்த குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டும், பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் வரத்து சீரானதும் அனுமதி வழங்கப்பட்டும் வருகிறது. இந்த மாதத்தில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமான இருப்பதால், குற்றால அருவியின் வெள்ளத்தில் பத்கர்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. அதேபோல தொடர் விடுமுறை என்பதாலும் இங்கே வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து, குற்றால அருவிகளில் மக்கள் வெள்ளமும் அதிக அளவில் இருப்பதைப் பார்க்கமுடிகின்றது. ஒருபுரம் அருவியின் ஆர்ப்பரிப்பும், மறுபுரம சுற்றுலா பயணிகளின் ஆரவாரமும் என்று திருவிழாபோன்று இருந்து வருகிறது.

‘வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல’

இந்நிலையில், குற்றால அருவிகளில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நேற்று சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் (டிசம்பர் 27) அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ‘வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல’ என்று முனுமுனுத்தவாறு அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

எனவே, இன்று குற்றாலத்திற்கு சென்று குளிப்பதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த முடிவை கைவிட்டு, தடை நீக்கப்பட்ட பின்னர் வேறுறொரு நாளில் அங்கு சென்று நீராடி மகிழுங்கள்.

First published:

Tags: Courtallam, Local News, Tenkasi