முகப்பு /செய்தி /தென்காசி / மனைவி கழுத்தை அறுத்த கணவன்.. தப்பியோடியவரை கைது செய்த போலீசார்

மனைவி கழுத்தை அறுத்த கணவன்.. தப்பியோடியவரை கைது செய்த போலீசார்

நவமணி - ராஜேஸ்வரி தம்பதி

நவமணி - ராஜேஸ்வரி தம்பதி

கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் ராஜேஸ்வரி தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் வசித்து வந்தார்.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் நவமணி (53). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி(43)-க்கும் இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்தநிலையில் ராஜேஸ்வரி தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நவமணி அவரது மனைவியைப் பார்க்க சென்ற போது, இரண்டு பேருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார் நவமணி. இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ்வரியின் அலறல் சத்தம் கேட்கவே, அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் நவமணி அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார்.

இதையும் படிக்க : கள்ளக்காதலிக்காக 2வயது மகனை கொன்று ஆற்றில் வீசிய நபர் - மகாராஷ்ட்ராவில் கொடூரம்

இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த சுரண்டை போலீசார் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கணவரை வலைவீசி தேடி வந்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் தப்பி ஓடிய கணவனை காவல்துறை கைது செய்தது. எதற்காக நடந்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் சுரண்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் : ச.செந்தில் (தென்காசி)

First published:

Tags: Crime News, Tamil News, Tenkasi